இந்தியா இங்கிலாந்து தொடர் : போட்டி எத்தனை மணிக்கு எந்த சேனலில் பார்க்கலாம் ? – விவரம் இதோ

INDvsENG
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து சாம்பியன்ஷிப் வெல்லும் வாய்ப்பை தவற விட்டதால் இந்த இங்கிலாந்து தொடரில் இந்திய அணி தங்களது பலத்தை நிரூபிக்க தயாராகி உள்ளது.

INDvsENG 1

- Advertisement -

மேலும் கடந்த 2007-ம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இல்லை என்ற குறையை போக்கி இம்முறை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்ற ஆர்வமாக உள்ளது. அதேபோன்று இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி இந்திய அணியிடம் தொடரை இழந்ததால் உள்ளூரில் வைத்து பதிலடி தர ஆயத்தமாகி உள்ளது.

இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் ரசிகர்களுக்கு பெரிய விருந்து என்றே கூறலாம். இந்நிலையில் இந்த தொடரை எந்த சேனலில் பார்க்கலாம் ? இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு போட்டிகள் துவங்கும் ? என்பது குறித்த முழு தகவல்களை நாங்கள் உங்களுக்காக இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

sony

அதன்படி இந்த ஐந்து போட்டிகளும் இந்திய நேரப்படி மதியம் மூன்று முப்பது (3.30 pm) மணி அளவில் துவங்கும். அதேபோன்று இங்கிலாந்தில் போட்டிகள் நடைபெற உள்ளதால் இந்த போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை சோனி தொலைக்காட்சி குழுமம் கைப்பற்றியுள்ளது. இதன் காரணமாக சோனி குழும சேனல்களில் இந்த போட்டிகளை காணலாம். SONY SIX (ஆங்கில வர்ணனை), SONY 4 (தமிழ் வர்ணனை), SONY 3 (ஹிந்தி வர்ணனை) என பல மொழிகளில் போட்டி நேரடியாக ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement