இந்தியா 4 ஆவது டெஸ்ட் போட்டியில் ஜெயித்தால் ஆசிய கோப்பை நடைபெறுவதில் சிக்கல் – விவரம் இதோ

IND

இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் தற்பொழுது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றிருந்த நிலையில் 3ஆவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி அகமதாபாதில் உள்ள நரேந்திர மோடி பகல்-இரவு டெஸ்ட்-ஆக சமீபத்தில் நடந்து முடிந்தது.இதில் இந்தியா பத்து விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ind

இந்நிலையில் எஞ்சியுள்ள நான்காவது போட்டி வருகிற 4ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அல்லது டிரா செய்தால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும். அப்படி தொடரை கைப்பற்றினால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறும் ஒருவேளை இந்த போட்டியில் தோற்று விட்டால் இந்தியா தனது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழக்கும். அந்த வாய்ப்பு ஆஸ்திரேலியாவுக்கு போய்விடும்.

இப்போது ஒருவேளை இந்தியா ஜெயித்து இறுதிக்கு தகுதி பெற்றால் வருகிற ஜூன் மாதம் 18ஆம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நியூசிலாந்து உடன் மோதும்.இந்திய ரசிகர்கள் எல்லோரும் இந்தியா ஜெயிக்க வேண்டும் என எதிர்பார்த்து வருகின்றனர். இந்தியா ஜெயித்து விட்டால் ஜூன் மாதத்தில் நடைபெற இரூக்கின்ற ஆசியக் கோப்பை தள்ளிப்போக வாய்ப்புள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் இஷான் மணி திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

IND

அதில் அவர் மேலும் கூறியதாவது “ஆசியக் கோப்பை கடந்த ஆண்டே நடத்தி முடிக்கப்பட்டுருக்க வேண்டும். ஆனால், கொரோனா அச்சம் காரணமாக அது தள்ளி போனது.எனவே இந்தாண்டு ஜீன் மாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தோம். மேலும் ஆசியக் கோப்பை தொடரை நல்லமுறையில் நடத்திக்கொடுக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் கடும் முயற்சிகளை எடுத்து வந்த வண்ணம் வருகிறது.

- Advertisement -

axar

இப்படி இருக்க இந்தியா இறுதி போடாடிக்கு தகுதி பெற்றால் ஆசியக்கோப்பை தொடர் தள்ளி போகும்.அப்படி தள்ளி போக போக 2023ஆம் ஆண்டு காத்திருக்கவும் வாய்ப்புள்ளது என கூறியுள்ளார். ஒருபுறம் இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஜெயிக்க வேண்டும் என ரசிகர்கள் ஆவலோடு இருந்த நிலையில் ஆசியக்கோப்பை தள்ளி போகவுள்ள செய்தி அவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.