முதல் ஒருநாள் போட்டி : மைதானம், போட்டி நேரம், ஒளிபரப்பாகும் சேனல் – முழு விவரம் இதோ

INDvsENG

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை புனே மைதானத்தில் துவங்க உள்ளது. ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி இந்த ஒருநாள் தொடரையும் கைப்பற்ற ஆர்வம் காட்டும் என்று தெரிகிறது.

Trophy

அதேவேளையில் ஏற்கனவே இரண்டு தொடர்களை இழந்த இங்கிலாந்து அணி இந்த ஒரு நாள் தொடரை கைப்பற்ற முயற்சிக்கும் என்பதால் இந்த தொடர் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நாளை துவங்க உள்ள முதல் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்த சிறு அலசல் இந்த பதிவில் காண்போம். இந்திய அணி டி20 தொடரில் கடைசியாக நடைபெற்ற இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றிருப்பதால் அதே நம்பிக்கையுடன் முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும்.

ஆனாலும் தோற்ற வருத்தத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப இந்திய அணிக்கு எதிராக கடுமையான போராட்டத்தை அளிக்கும் என்று தெரிகிறது. மேலும் அதுமட்டுமின்றி 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை சாம்பியனான இங்கிலாந்து அந்த தொடரின் லீக் போட்டியில் இந்திய அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. அதுவே இவ்விரு அணிகளும் கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டி ஆகும்.

thakur

எனவே இங்கிலாந்து அணி நிச்சயம் இந்த போட்டியில் தங்களது ஆதிக்கத்தை தொடர விரும்பும். இருப்பினும் தற்போது நடைபெற்று முடிந்த டி20 தொடரில் கோலி, ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ஹர்டிக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பான பார்மில் உள்ளனர். அதுமட்டுமின்றி பவுலிங்கில் புவனேஸ்வர் குமார், சிராஜ், நடராஜன், சாஹல் என அனைவரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் என்பதால் இந்திய அணியும் பலமாக இருக்கும் என்று தெரிகிறது.

- Advertisement -

Morgan

அதே வேளையில் இங்கிலாந்து அணியிலும் பட்லர், பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், ஜேசன் ராய் மார்க் வுட், மொயின் அலி போன்ற சிறப்பான வீரர்கள் உள்ளனர். எனவே நாளைய போட்டியில் இரு அணிகளும் சமமான வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த போட்டி நாளை 23 ஆம் தேதி செவ்வாய் கிழமை மதியம் 1.30 மணிக்கு துவங்குகிறது. இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். மேலும் தமிழ் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் இந்த போட்டியை காணலாம்.