5 ஆவது டெஸ்ட் கேன்சல் : இன்று போட்டி துவங்க இருந்த நிலையில். அதிரடி அறிவிப்பு – என்ன ஆனது ?

indvseng
Advertisement

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் 4 ஆட்டங்கள் முடிவு பெற்ற நிலையில் இந்திய அணியானது 2 க்கு 1 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி இன்று செப்டம்பர் 10-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெற இருந்தது.

Kohli

இவ்வேளையில் தற்போது இந்த இறுதிப் போட்டி கேன்சல் செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதன்படி அவர்கள் வெளியிட்டுள்ள அந்த தகவலில் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 5வது டெஸ்ட் போட்டி இன்று நடைபெறாது என்ற தகவலை வெளியிட்டது.

- Advertisement -

மேலும் இந்த போட்டி கேன்சல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தகவலை வெளியிட்டுள்ளனர். மேலும் ரசிகர்கள் இதனால் ஏமாற்றமடைந்து இருந்தால் அவர்களுக்கு தங்களது மன்னிப்பையும் அவர்கள் கேட்டுள்ளனர்.

இந்திய அணியின் குழுவினர் மத்தியில் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால் நிச்சயம் இந்த போட்டியில் இந்திய அணியை களம் இறக்க முடியாத சூழல் ஏற்படலாம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை இந்திய அணியின் முன்னணி வீரரான தினேஷ் கார்த்திக்கும் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் : “நோ பிளே டுடே” “ஓகே டாட்டா பாய் பாய்” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக தற்போது இந்த 5வது டெஸ்ட் போட்டி கேன்சல் ஆகிவிட்டது என்பது உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement