முக்கிய வீரர் ஒருவரை அணியிலிருந்து வெளியேற்றி நடராஜனுக்கு வாய்ப்பு கொடுத்த கோலி – விவரம் இதோ

INDvsENG

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தற்போது டாஸ் முடிந்து வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்துள்ளார். அதன்படி தற்போது இந்திய அணி பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இரு அணிகளும் மோதவுள்ளன.

INDvsENG

இந்த தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பெற்று சமநிலையில் உள்ளதால் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஏதேனும் மாற்றம் இருக்குமா ? என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அணியில் ஒரே ஒரு முக்கிய மாற்றத்தை இந்திய அணி கேப்டன் கோலி செய்துள்ளார். அதன்படி கடந்த நான்கு போட்டிகளாக பேட்டிங்கில் தடுமாறி வரும் ராகுலை அணியில் இருந்து நீக்கி அவருக்கு பதிலாக தமிழகம் வேகப்பந்து வீச்சாளரான நடராஜனுக்கு இடம் அளித்துள்ளார்.

rahul

மேலும் ராகுல் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளதால் இன்றைய போட்டியில் ரோகித் சர்மாவுடன், கேப்டன் கோலி துவக்க வீரராக களமிறங்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படாமல் உள்ளது. கடந்த போட்டியில் நான்கு பவுலர்கள் மற்றும் ஹர்டிக் பாண்டியா சேர்த்து 5 வீரர்கள் மட்டுமே விளையாடினர்.

- Advertisement -

Nattu

இருந்த அணியை மாற்றி தற்போது 5 பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்-ரவுண்டராக ஹார்டிக் பாண்டியாவுடன் அணியை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.