- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பஸ்பால் இங்கிலாந்து இஸ் பேக்.. பும்ரா இருந்தும்.. 1990க்குப்பின் மோசமான சாதனை படைத்த இந்தியா தப்புமா?

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 4வது டெஸ்ட் போட்டி ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் துவங்கியது. 2 – 1* என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருக்கும் இங்கிலாந்து அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா போராடி 358 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 61, ஜெய்ஸ்வால் 58, ரிஷப் பண்ட் காயத்தையும் பொருட்படுத்தாமல் விளையாடி 54 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய இங்கிலாந்துக்கு பென் டக்கெட் – ஜாக் கிராவ்லி ஆகியோர் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாட துவங்கினார்கள்.

- Advertisement -

பும்ரா இருந்தும்:

பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக வந்தது முதலே பஸ்பால் என்ற பெயரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அதிரடியாக விளையாடும் அணுகுமுறையைப் பின்பற்றி வருகிறது. அப்படிப்பட்ட இங்கிலாந்தை கடந்த 2 போட்டிகளாக சிறப்பாக பவுலிங் செய்த இந்தியா அதிரடியாக விளையாடாமல் கட்டிப் போட்டது. ஆனால் இந்தப் போட்டியில் கொஞ்சம் சுமாராக பவுலிங் செய்த இந்தியாவை வெளுத்து வாங்கிய டக்கெட் – கிராவ்லி ஜோடி 162 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்துக்கு நல்ல துவக்கத்தைக் கொடுத்தார்கள்.

ஏற்கனவே இத்தொடரின் முதல் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இதே ஜோடி இந்தியாவுக்கு எதிராக 188 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்தை வெற்றி பெற வைத்தது. அதே போல இப்போட்டியிலும் இந்தியாவை அடித்த அந்த ஜோடி இத்தொடரில் 2வது முறையாக 150+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதன் வாயிலாக 1990க்குப்பின் 35 வருடங்கள் கழித்து ஒரு டெஸ்ட் தொடரில் எதிரணியை 2 முறை 150+ ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைக்க விட்டு இந்தியா மோசமான சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

இந்தியா தப்புமா:

இத்தனைக்கும் முதல் போட்டியை போலவே இப்போட்டியிலும் ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியாவுக்காக விளையாடுகிறார். ஆனால் அதையும் தாண்டி பஸ்பால் ஸ்டைலை மீண்டும் கொண்டு வந்து அதிரடியாக விளையாடிய இங்கிலாந்துக்கு கிராவ்லி 84 ரன்களில் ஜடேஜா சுழலில் அவுட்டானார். மறுபுறம் சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டக்கெட் 94 ரன்னில் கம்போஜ் வேகத்தில் விக்கெட்டை இழந்தார்.

இதையும் படிங்க: 41 பந்தில் 100.. 12.2 ஓவரில் 153.. இங்கிலாந்தை சொந்த மண்ணில் தனியாளாக தெறிக்க விட்ட ஏபிடி.. தெ.ஆ ஹாட்ரிக் வெற்றி

இறுதியில் நிறைவுக்கு வந்த முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 225/2 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ஜோ ரூட் 11*, ஓலி போப் 20* ரன்களுடன் உள்ளார்கள். அதைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் பஸ்பால் மீண்டும் வந்து விட்டதாக கலக்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். எனவே 3வது நாளில் இங்கிலாந்தை 358க்குள் இந்தியா ஆல் அவுட் செய்தாலே மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -