இங்கிலாந்து நட்சத்திரா வீரர் காயம் காரணமாக விலகல்..! இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவா..! – யார் தெரியுமா..?

- Advertisement -

இந்திய அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது இங்கிலாந்து அணி. இந்நிலையில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஒரு நாள் போட்டி இன்னும் சில மணி நேரத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியில் புதிய வீரர் டேவிட் மலன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
england
இங்கிலாந்து அணியில் விளையாடி வந்த நட்சத்திரா ஆட்டக்காரர் ஹேல்ஸ், காயம் காரணமாக இந்தியாவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஹேல்ஸ் இல்லாதது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும். இந்நிலையில் ஹல்ஸிற்கு மாற்றாக இங்கிலாந்து அணியில் டேவிட் மலன் என்பவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

30 வயதாகும் இவர், இங்கிலாந்து அணியில் கடந்த 2017 ஆம் ஆண்டு டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார். அதற்கு முன்னாள் 165 முதல் ரக போட்டியிலும், ஏ அணியில் 143 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இன்று (ஜூலை 12 ) நடக்கவுள்ள ஒரு நாள் போட்டியின் மூலம் தனது முதல் ஒரு நாள் போட்டியில் விளையாடவுள்ளார் டேவிட் மலன்.
hales
இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் மலன் 696 ரன்களை குவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஆஸ்த்ரேலியாவிற்கு எதிரான நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடிய டேவிட் மலன் முதல் இன்னிங்ஸ் 140 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 54 ரன்களையும் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement