மஹா புயலால் இன்றைய போட்டி நடக்குமா ? நடக்காதா ? – வெளியான பிட்ச் ரிப்போர்ட்

Ground
- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே டெல்லியில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் வங்கதேச அணி இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

IND

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி நடக்குமா நடக்காதா என்ற விவாதமே தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஏனெனில் மகா புயல் குஜராத்தில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு அதன்படி நேற்று இரவு ராஜ்கோட்டில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்நிலையில் இன்றைய போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ராஜ்கோட் மைதான நிர்வாகம் அளித்த பதிலாவது :

நேற்று இரவு கனமழை பெய்தது இருப்பினும் இன்றைய போட்டி நடக்க அதிக சாத்தியங்கள் உள்ளன. ஏனெனில் இந்த மைதானத்தில் நீரை வெளியேற்றும் வாய்க்கால் வசதி மிகவும் சிறப்பான முறையில் உள்ளது. எந்த அளவு தண்ணீர் இருந்தாலும் அதனை உடனடியாக வெளியேற்றும் வசதியும் உள்ளது. மேலும் அனுபவம் வாய்ந்த மைதான ஊழியர்கள் இருப்பதால் இன்று காலை மழை பெய்தாலும் எங்களால் அந்த நீரை வெளியேற்ற முடியும்.

Ground-1

மேலும் மதியத்திற்கு பின்னர் மழை பெய்யாமல் இருந்தால் இரவு போட்டி தொடங்குவதற்கு முன் மைதானம் சிறப்பாக தயாராகிவிடும். மேலும் இந்த போட்டி பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஒரு போட்டியாக அமைய வாய்ப்பு உள்ளது. ஏனெனில் மைதானத்தில் உள்ள புற்களை முழுவதுமாக நீக்கி உள்ளோம். எனவே மைதானம் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே கைகொடுக்கும் என்றும் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement