IND vs BAN : 2015 ஆணவ ஆட்டத்துக்கு வங்கதேசத்தை இந்தியா பழி தீர்க்குமா? புள்ளிவிவரம், அதிக ரன்கள் – விக்கெட் எடுத்தவர்கள்

IND vs BAN Rohit Sharma Liton Das
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்றத்தை சந்தித்த பின் நியூசிலாந்தில் விளையாடி விட்டு நாடு திரும்பிய இந்தியா அடுத்ததாக அருகில் இருக்கும் வங்கதேசத்திற்கு பயணித்து 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்ககிறது. அதில் முதலாவதாக வரும் 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 3 போட்டியில் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. அந்த உலக கோப்பையில் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, கேஎல் ராகுல், ஷிகர் தவான் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் அடங்கிய முதன்மை அணி இத்தொடரில் களமிறங்குகிறது.

அதற்காக ஏற்கனவே வங்கதேசம் பயணித்த இந்திய அணியினர் டிசம்பர் 4ஆம் தேதியன்று முதல் போட்டி நடைபெறும் டாக்கா மைதானத்தில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மறுபுறம் சமீபத்திய ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை உள்ளிட்ட அனைத்து தொடர்களிலும் படுதோல்விகளை சந்தித்த வங்கதேசம் சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் வெற்றி பாதையில் பயணிக்க போராட உள்ளது. பொதுவாகவே இந்தியாவுக்கு அவ்வப்போது அதிர்ச்சி தோல்விகளை கொடுக்கும் அணியாக கருதப்படும் வங்கதேசம் கடைசியாக சொந்த மண்ணில் கடந்த 2015ஆம் ஆண்டு இதே போல் 3 போட்டியில் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.

- Advertisement -

மிர்ப்பூரில் நடைபெற்ற அத்தொடரின் முதல் போட்டியில் 307 ரன்கள் குவித்து பின்னர் முஸ்தப்பிசுர் ரஹ்மான் 5 விக்கெட்டுகள் எடுத்ததால் இந்தியாவை 228 ரன்களுக்கு சுருட்டிய வங்கதேசம் சூப்பராக வென்றது. அதை தொடர்ந்து நடைபெற்ற 2வது போட்டியிலும் மேஜிக் நிகழ்த்திய ரகுமான் 6 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவை 200 ரன்கள் சுருட்டியதால் மீண்டும் வங்கதேசம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் கடைசி போட்டியில் தோற்றாலும் 2 – 1 (3) என்ற கணக்கில் தொடரை வென்ற வங்கதேசம் ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக ஒரு தொடரை வென்று சரித்திரம் படைத்தது.

அது கூட பரவாயில்லை ஆனால் காணாமல் கண்ட அந்த வெற்றியால் கர்வமான அந்நாட்டு ரசிகர்கள் தொடர் நாயகன் விருது வென்ற முஸ்தபிசுர் ரஹ்மான் கேப்டன் தோனி, ரகானே, விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு பாதி மொட்டை அடித்தது போன்ற புகைப்படங்களை உருவாக்கி கிண்டலடித்து ஆணவ ஆட்டம் போட்டனர். எனவே அந்த பழைய கணக்குக்கு இம்முறை ரோகித் சர்மா தலைமையில் இந்தியா பழி தீர்க்க வேண்டும் என்பதே அதை மறக்காமல் வைத்திருக்கும் இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- Advertisement -

1. இந்த நிலையில் வரலாற்றில் இவ்விரு அணிகளும் இது வரை மோதிய 36 போட்டிகளில் இந்தியா 30இல் வென்று வலுவான அணியாகவே உள்ளது. 5 போட்டியில் வங்கதேசம் வென்றது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. குறிப்பாக இத்தொடர் நடைபெறும் வங்கதேச மண்ணில் 22 போட்டிகளில் களமிறங்கிய இந்தியா 17 வெற்றிகளை பதிவு செய்து வலுவாகவே உள்ளது. 4 போட்டிகளில் வங்கதேசம் வென்றது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

2. வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த டாப் 3 இந்திய வீரர்கள்:
1. விராட் கோலி : 544
2. விரேந்தர் சேவாக் : 474
3. எம்எஸ் தோனி : 421

- Advertisement -

3. அதே போல் வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேனாக விராட் கோலி (3) முதலிடத்தில் உள்ளார். அதிக அரை சதங்கள் அடித்த இந்திய வீரராக (3) வீரேந்திர சேவாக் உள்ளார். அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரராக வீரர் சேவாக் : 175, 2011.

4. வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த டாப் 3 இந்திய பவுலர்கள்:
1. அஜித் அகர்கர் : 13
2. ஜாகிர் கான் : 11
3. ரவிச்சந்திரன் அஸ்வின் : 8

5. சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய வீரராக யாருமே மறக்க முடியாத ஸ்டூவர்ட் பின்னி (6/4) உள்ளார். வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒருநாள் போட்டிகளில் இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர் : 370, 2011.

Advertisement