இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியை சேப்பாக்கத்தில் பாக்கனுமா – டிக்கெட் விலை இதோ

IND-vs-BAN
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வங்கதேச கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படாத வேளையில் அடுத்த சில தினங்களில் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சேப்பாக்கம் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விலை :

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் துலீப் டிராபி தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் ஒன்பதாம் தேதி நாளை துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியை நேரில் காண டிக்கெட் விலை என்ன என்பது குறித்த தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விலை குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயில் இருந்து அதிகபட்சம் 15,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

டிக்கெட் விற்பனை நாளை காலை 9:45 மணி முதல் ஆன்லைனில் நடைபெற உள்ளது. எனவே இந்த போட்டியை நேரில் காண விரும்பும் ரசிகர்கள் அனைவரும் ஆன்லைன் வாயிலாக டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27-ஆம் தேதி முதல் அக்டோபர் 1-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இதையும் படிங்க : 16 வருஷம் கழிச்சும் ரோஹித் இன்னும் மாறல.. டெக்கான் சார்ஜர்ஸ் டீம்லயே பாத்தேன்.. ஸ்காட் ஸ்டைரிஸ் பேட்டி

அண்மையில் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணியானது அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வென்று அசத்தியதால் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிலேயான இந்த டெஸ்ட் தொடரும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement