நாளைய இறுதிப்போட்டி துவங்கும் நேரம், சேனல் மற்றும் மைதானம் பற்றிய – முழுவிவரம்

Toss

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டிகளிலும் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சம நிலையில் உள்ளனர். இந்நிலையில் தொடரை முடிவு செய்யும் இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது.

Ind

இந்த போட்டி நாக்பூர் விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற உள்ளது. நாளை இரவு 7 மணிக்கு துவங்கப்பட உள்ள இந்த போட்டி ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்றும் மேலும் இதனை ஹாட்ஸ்டார் அப்ளிகேஷன் மூலம் நேரலையில் ரசிகர்கள் காண முடியும்.

மேலும் நாளைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளதால் நாளைய போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் அதே போன்று நாளைய போட்டியில் பங்களாதேஷ் வெற்றிபெற்றால் முதல் முறையாக இந்திய அணியை வீழ்த்தி கைப்பற்றி தொடரை கைப்பற்றும் என்பதால் அவர்களும் நாளைய போட்டிக்காக முனைப்புடன் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.