ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் துவங்கியுள்ளது. அதில் முன்னாள் சாம்பியன் இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் இந்தியா தங்களது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. அந்தப் போட்டி பிப்ரவரி 20ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துவங்குகிறது.
2002, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றியாளரான இந்தியா இம்முறை 3வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது. சமீபத்தில் வலுவான இங்கிலாந்தையே தோற்கடித்த இந்தியா இப்போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். மறுபுறம் 2007 உலகக்கோப்பை போல இப்போட்டியில் மேஜிக் செய்து இந்தியாவை தோற்கடிக்க வங்கதேசம் முயற்சிக்க உள்ளது.
துபாய் மைதானம்:
அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்போட்டி நடைபெறும் துபாய் மைதானத்தின் விவரங்களை பார்ப்போம். 2009இல் தோற்றுவிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் 25000 ரசிகர்கள் அமரும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இம்மைதானத்தில் வரலாற்றில் 58 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த மைதானத்தில் இந்தியா 5 போட்டிகளில் விளையாயுள்ளது.
அதில் இந்தியா 4 வெற்றிகளைப் பெற்ற நிலையில் ஒரு போட்டி சமநிலையில் முடிந்தது. இந்த மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிராக 2 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 2 வெற்றிகளைப் பெற்றுள்ளது.
வெதர் ரிப்போர்ட்:
துபாய் நவரில் பிப்ரவரி 20ஆம் தேதி மழை பெய்வதற்கு வாய்ப்பில்லை என்று அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. எனவே இந்தப் போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.
பிட்ச் ரிப்போர்ட்:
துபாய் மைதானத்தின் பிட்ச் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சாதகமாக இருந்து வருகிறது. ஆரம்பகட்ட ஓவர்களில் புதிய பந்துகளில் நல்ல சீம் மூமன்ட் இருக்கும். எனவே அதைப் பயன்படுத்தி வேகப்பந்து வீச்சாளர்கள் சவாலைக் கொடுப்பார்கள். அதே சமயம் நேரம் செல்ல செல்ல பேட்டிங் செய்வதற்கான சாதகங்கள் அதிகரிக்கும். அதைப் பயன்படுத்தி பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்கள் குவிக்க முடியும்.
இதையும் படிங்க: 60 ரன்ஸ்.. அமர்க்களமாக துவங்கிய நியூஸிலாந்து.. 4க்கு 0.. 25வது வருடமாக பாகிஸ்தானுக்கு நேர்ந்த பரிதாபம்
அதே போல ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்த துவங்குவார்கள். பகலிரவு போட்டிகளில் இங்கே பனியின் தாக்கமும் இருக்கும். வரலாற்றில் இங்கு நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 218. இங்கு வரலாற்றில் நடைபெற்ற போட்டிகளில் 22 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும் 34 முறை சேசிங் செய்த அணிகளும் வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் முதலில் பவுலிங் செய்து நன்றாக செயல்படுவது வெற்றியை கொடுக்கலாம்.



