IND vs BAN : வைட்வாஷ் அவமானத்தை தவிர்க்குமா இந்தியா, சட்டோகிராம் மைதானம் எப்படி? பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

- Advertisement -

அண்டை நாடான வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்தியா முதலிரண்டு போட்டிகளின் முடிவில் அடுத்தடுத்த அவமான தோல்விகளை சந்தித்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. அந்த 2 போட்டிகளிலுமே விராட் கோலி, ஷிகர் தவான் உள்ளிட்ட நம்பிக்கை நட்சத்திரங்கள் அடங்கிய பேட்டிங் துறை சொதப்பிய நிலையில் முதல் போட்டியில் 9 விக்கெட்டுகளையும் 2வது போட்டியில் 6 விக்கெட்டுகளையும் ஆரம்பத்திலேயே எடுத்ததால் அஜாக்கிரதையாக செயல்பட்ட பவுலர்கள் மெஹதி ஹசன் போன்ற டெயில் எண்டர் அற்புதமாக விளையாடி வெற்றியை தட்டிப் பறிக்கும் அளவுக்கு சுமாராக செயல்பட்டது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது.

2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் பயணத்தை டி20 உலகக்கோப்பை சந்தித்த தோல்விக்கு பின் துவக்கிய இந்தியா சமீபத்திய நியூசிலாந்து ஒருநாள் தொடரில் தோற்ற நிலையில் தற்போது கத்துக்குட்டி வங்கதேசத்திடமும் மண்ணைக் கவியுள்ளது. இதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ள இந்திய அணி வெற்றி பாதையில் மீண்டும் நடக்க டிசம்பர் 10ஆம் தேதியன்று நடைபெறும் கடைசி போட்டியில் வென்று குறைந்தபட்சம் வைட்வாஷ் அவமானத் தோல்வியை தவிர்க்க போராட உள்ளது.

- Advertisement -

சட்டோகிராம் மைதானம்:
இருப்பினும் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் காயமடைந்த நிலையில் 2வது போட்டியில் தற்காலிமாக வழி நடத்தி வெற்றியை கோட்டை விடும் அளவுக்கு சுமாராக கேப்டன்ஷிப் செய்த துணை கேப்டன் ராகுல் 3வது போட்டியில் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மீண்டும் பெரிய பின்னடைவை சந்தித்துள்ள இந்திய அணி பேட்டிங், பவுலிங் என அனைத்து துறைகளிலும் ஒன்று சேர்ந்து செயல்பட்டால் மட்டுமே ஒயிட்வாஷ் அவமான தோல்வியை தவிர்க்க முடியும் என்ற பரிதாபத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக இத்தொடரின் முதலிரண்டு போட்டிகள் மிர்பூர் மைதானத்தில் நடைபெற்ற நிலையில் கடைசி சம்பிரதாய போட்டி டிசம்பர் 10ஆம் தேதியன்று இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு சட்டோகிராம் நகரில் இருக்கும் ஜாகுர் அகமது சவுத்ரி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 22,000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இம்மைதானத்தில் கடந்த 2006 முதல் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

1. வரலாற்றில் இங்கு இதுவரை நடைபெற்ற 25 போட்டிகளில்15 போட்டிகளில் சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளன. 8 போட்டிகளில் மட்டுமே முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றன. 2 மழையால் கைவிடப்பட்டது.

2. இங்கு வரலாற்றில் 25 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள வங்கதேசம் 15 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. 2 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 8 தோல்விகளை சந்தித்தது. வரலாற்றில் இங்கு முதலும் கடைசியுமாக கடந்த 2007ஆம் வங்கதேசத்தை இந்தியா எதிர்கொள்ளவிருந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அதன் பின் இப்போது தான் இம்மைதானத்தில் இவ்விரு அணிகளும் மோதுகின்றன.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:
முதலிரண்டு போட்டிகள் நடைபெற்ற மிர்பூர் மைதானத்தை போலவே இந்த மைதானமும் வரலாற்றில் பந்து வீச்சுக்கு சாதகமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக இங்கு ஆரம்பம் முதலே சுழல் பந்து வீச்சாளர்கள் அதிகமாக ஆதிக்கத்தை செலுத்துவதை பார்க்க முடியும். அதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்தில் மட்டுமே அதிக தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாக இருப்பார்கள்.

அத்துடன் வரலாற்றில் இங்கு நடைபெற்ற 25 போட்டிகளில் 2 முறை மட்டுமே 300 ரன்கள் தொடப்பட்டது. இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் சராசரி ஸ்கோர் 233 ஆகும். அந்த வகையில் பவுலிங்க்கு சாதகமான இந்த மைதானத்தில் சுழல் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்ள தெரிந்த பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை குவிக்கலாம். மேலும் இங்கு வரலாற்றில் நிறைய போட்டிகளில் சேசிங் செய்த அணிகள் வென்றதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

வெதர் ரிப்போர்ட்:
இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளைப் போலவே இப்போட்டி நடைபெறும் சட்டோகிராம் நகரில் போட்டி நாளன்று மழை பெய்வதற்கான வாய்ப்பு 1 – 2% மட்டுமே இருப்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை. அதே போல் காற்றின் வேகமும் மிகவும் குறைவாக இருப்பதுடன் வானம் நல்ல தெளிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement