வங்கதேசம் 112/8 திணறல்.. ரோஹித்திடம் மன்னிப்பு கேட்ட பண்ட்.. தவறை சரிசெய்து தெறிக்க விட்ட ஆகாஷ் தீப்

IND vs BAN 2
- Advertisement -

இந்தியா – வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா போராடி 376 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில் ஆகியோர் ஆரம்பத்திலேயே அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் தடுமாறிய இந்திய அணிக்கு மிடில் ஆர்டரில் அபாரமாக விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் சொந்த ஊரில் சதமடித்து 113 ரன்கள் குவித்து காப்பாற்றினார். அவருடன் சேர்ந்து விளையாடிய ரவிந்திர ஜடேஜா 86 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு கை கொடுத்தார். அவர்களுடன் ஜெய்ஸ்வால் 56, ரிஷப் பண்ட் 39 ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

ரிஷப் பண்ட் மன்னிப்பு:

வங்கதேச அணிக்கு அதிகபட்சமாக ஹசன் மஹ்முத் 5 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு சாத்மன் இஸ்லாமை 2 ரன்களில் ஜஸ்ப்ரித் பும்ரா கிளீன் போல்ட்டாக்கினார். அதே போல மற்றொரு துவக்க வீரர் ஜாகிர் ஹசன் தடுமாற்றமாக விளையாடிக் கொண்டிருந்த போது சிராஜ் வீசிய ஒரு பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அப்போது இந்திய அணியினர் அவுட் கேட்ட போதிலும் நடுவர் கொடுக்கவில்லை.

அதன் பின் இந்திய கேப்டன் ரோகித் சர்மா ரிவ்யூ எடுக்க முடிவெடுத்தார். அப்போது பந்து மேலே சென்றிருக்கும் என்று கீப்பர் ரிஷப் பண்ட் உறுதியாக சொன்னதால் ரோஹித் சர்மா ரிவியூ எடுக்காமல் விட்டு விட்டார். ஆனால் ரிப்ளையில் பார்க்கும் போது பந்து லெக் ஸ்டம்ப்பில் அடித்தது தெளிவாக தெரிந்தது. அதனால் தம்முடைய தவறான அழைப்பால் விக்கெட் பறிபோனதற்காக ரோஹித் மற்றும் சிராஜிடம் ரிஷப் பண்ட் கையை உயர்த்தி மன்னிப்பு கேட்டார்.

- Advertisement -

மிரட்டிய ஆகாஷ் தீப்:

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் 8வது ஓவரின் முதல் பந்தில் ஜாகிர் ஹசனை கிளீன் போல்ட்டாக்கிய ஆகாஷ் தீப் அடுத்த பந்திலேயே அதற்கடுத்ததாக வந்த மோனிமுல் ஹைக்கையும் கோல்டன் டக் அவுட்டாக்கினார். அந்த வகையில் ரிஷப் பண்ட் தவறை சரி செய்த அவர் இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்தார்.

இதையும் படிங்க: சேப்பாக்கம் மைதானம்னா போதும்.. அஷ்வின் நிகழ்த்தியுள்ள தனித்துவமான சாதனை – விவரம் இதோ

மறுபுறம் தடுமாற்றமான பெற்ற வங்கதேசத்துக்கு நிதானமாக விளையாட முயற்சித்த கேப்டன் சாண்டோ 20 ரன்களில் சிராஜ் வேகத்தில் அவுட்டானார். அதே போல மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாட முயற்சித்த ரஹீம் 8, ஷாகிப் அல் ஹசன் 32, லிட்டன் தாஸ் 22 ரன்களில் பும்ரா, ஜடேஜா பந்து வீச்சில் அவுட்டானார்கள். அதன் காரணமாக 2வது நாள் தேனீர் 112-8 என திணறி வரும் வங்கதேசத்திற்கு களத்தில் மெஹதி ஹசப் 12* ரன்களுடன் உள்ளார்.

Advertisement