மூன்றாவது டெஸ்ட் போட்டி மழையால் நிறுத்தம். மேலும் 2 நாட்களுக்கு இந்த நிலை தொடருமாம் – போட்டி நடக்குமா ?

Rain
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3வது டெஸ்ட் போட்டி இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக ரோகித் சர்மா மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் இந்திய அணியில் இணைந்தனர். அதேபோன்று ஆஸ்திரேலிய தரப்பில் வார்னர், புகோவ்ஸ்கி ஜோடி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய துவக்க வீரராக வார்னர் மற்றும் புகோவ்ஸ்கி ஆகியோர் களமிறங்கினர்.

warner

- Advertisement -

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது அடைந்த காயத்திற்கு பின்னர் மீண்டும் தற்போது அணிக்கு திரும்பியுள்ள வார்னர் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முகமது சிராஜ் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து அணியின் ஸ்கோர் 21 ரன்கள் இருந்த நிலையில் மழையில் குறுக்கிட்டால் முதல் நாள் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ஆஸ்திரேலிய அணி 7.1 அவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 21 ரன்கள் குவித்துள்ள நிலையில் உணவு இடைவேளை கடந்து தற்போது தேனீர் இடைவேளை வரை வந்திருக்கும் வேளையில் போட்டி இன்னும் துவங்கவில்லை. இந்நிலையில் சிட்னி நகரில் அடுத்த 2 நாட்களுக்கு மழை காண வாய்ப்பு இருக்கிறது என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் :

siraj

சிட்னியின் தென்கிழக்கு பகுதியில் அதிக அளவில் மேக மூட்டங்கள் காணப்படுகின்றன. அதனால் லேசான மழை வாய்ப்பு காணப்படுகிறது, கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றாலும் போட்டியின் முதல் இரண்டு நாட்கள் மழையால் பாதிக்கப்படும். மூன்றாவது நாளில் மழையின் தாக்கம் இன்றி போட்டி நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். ஏற்கனவே சிட்னியில் கொரோனா வைரஸ் பெருகி வருகிறது என்ற காரணத்தினால் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு சென்று கிரிக்கெட் விளையாடும் இந்திய அணிக்கு தற்போது மழையும் அடுத்த பிரச்சினையாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. எது எப்படி இருப்பினும் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முழு உத்வேகத்தையும் இந்திய அணி காண்பிக்கும் என்று தெரிகிறது.

Advertisement