இந்திய ஆஸ்திரேலிய தொடருக்கான டிக்கெட் விற்பனை அமோகம். டிக்கெட் எல்லாம் காலி – ஆனா மேட்ச் பாக்க ஒரு கண்டிஷன் இருக்கு

INDvsAUS

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவிற்கு சென்று மிக நீண்ட தொடருக்கு தயாராகி வருகிறது. இதற்காக மூன்று விதமான அணிகளையும் சேர்த்து 32 இந்திய வீரர்கள் இந்த ஆஸ்திரேலிய தொடருக்காக சென்று இருக்கின்றனர். டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் என அடுத்தடுத்த தொடர்கள் நடைபெற இருக்கிறது. ஒருநாள் தொடர் வரும் நவம்பர் 27ஆம் தேதி துவங்க இருக்கிறது.

INDvsAUS

தற்போது வரை கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் உலகம் முழுவதும் நடைபெற்று வந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முதன் முறையாக வைரஸ் தாக்கத்திற்கு பிறகு ரசிகர்களை கொஞ்சம் கொஞ்சமாக அனுமதிக்க முடிவு செய்திருக்கிறது. முதல் ஒருநாள் போட்டிகளுக்கான ரசிகர்களின் எண்ணிக்கையை 50% ஆக வைத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு அதற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் துவக்கியது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.

இதில் முதல் ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டுகள் கிட்டத்தட்ட 95 சதவீத டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. மற்றபடி மீதமிருக்கும் ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் வெறும் 24 மணி நேரத்திற்குள் தீர்ந்துவிட்டது. டெஸ்ட் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை குறித்து இன்னும் அறிவிப்புகள் வெளியாகவில்லை.

fans

பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இந்த தொடருக்கான டிக்கெட் விற்பனையில் ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதிக்கப்பட்டுள்ளதாம். அதாவது வெளிநாட்டில் இருந்து வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு டிக்கெட் கிடையாதாம். ஒருவேளை ரசிகர்களை அனுமதித்து நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கான யுக்தி வெற்றிபெற்றுவிட்டால் அடுத்த வருடம் கண்டிப்பாக இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெறும். மேலும் இந்த ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றே தெரிகிறது.

- Advertisement -

fans

இதற்கான வேலையைத்தான் பிசிசிஐ தற்போது செய்து வருகிறது. ஏனெனில் அடுத்த வருட தொடர் துவங்க இன்னும் சில மாதங்களே இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 2018-ஆம் ஆண்டில் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்ற விளையாடிய போது முதன் முதலாக வரலாற்றுச் சிறப்பு மிக்க வகையில் டெஸ்ட் தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.