ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடர் இந்திய நேரப்படி இத்தனை மணிக்கு தான் துவங்கும் – விவரம் இதோ

INDvsAUS
- Advertisement -

கடந்த சில தினங்களாகவே சமூகவலைதளத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான தொடர் குறித்த தகவல்களே அதிக அளவில் பரவிவருகின்றன. ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டி, நான்கு டெஸ்ட் போட்டிகள் என மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது.

INDvsAUS

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்று தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு தற்போது தொடரில் விளையாட தயாராக உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை(நாளை) துவங்க உள்ளது. கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செயல்பட்டதால் இம்முறையும் சில தொடர்களை கைப்பற்ற தீவிரம் காட்டும்.

அதேபோன்று ஆஸ்திரேலிய அணியும் கடந்த முறை அடைந்த தோல்விக்கு பழி வாங்கும் விதமாக இந்திய அணியை வீழ்த்தி ஆக வேண்டுமென்று மும்முரம் காட்டி வருகிறது. இந்நிலையில் இந்த தொடர் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்த தொடரின் போட்டிகள் இந்திய நேரத்தில் எத்தனை மணிக்கு துவங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன் முழுவிவரம் இதோ

ind vs aus schedule

வழக்கமாக இந்தியாவில் நடைபெறும் அனைத்து தொடர்களும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்பி வந்தது. ஆனால் இம்முறை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதால் இந்த போட்டிகள் அனைத்தையும் சோனி டென்1, சோனி டென்3, சோனி சிக்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Advertisement