இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும், அடிலெய்டு நகரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றுள்ளன.
4 ஆவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன :
இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரானது தற்போது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது வரும் டிசம்பர் 14-ஆம் தேதி காபா நகரில் துவங்க இருக்கிறது.
அதற்கு அடுத்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது மெல்போர்னில் டிசம்பர் 26-ம் தேதி துவங்குகிறது. இன்னும் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்க நான்கு நாட்கள் மீதமுள்ள வேளையில் தற்போதே நான்காவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏனெனில் எப்போதுமே டிசம்பர் 26-ஆம் தேதி துவங்கும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளை பார்க்க ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அந்த வகையில் கிறிஸ்மஸ் திருவிழாவிற்கு அடுத்த நாள் துவங்கும் இந்த முக்கியமான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன.
பலம் வாய்ந்த இந்த இரு அணிகளுக்கு இடையேயான மோதல் மிகச்சிறப்பாக இருக்கும் என்பதனால் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவினை ஆஸ்திரேலிய நிர்வாகம் துவங்க கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரசிகர்கள் இந்த மெல்போர்ன் போட்டியை காண முன்கூட்டியே தங்களது டிக்கெட்டுகளை பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க : ரிட்டையர்டு ஆனாலும் தல தலதான்.. ஷாருக்கான் மற்றும் அபிஷேக் பச்சனை பின்னுக்கு தள்ளி அசத்தல்
இதன் மூலம் நான்காவது பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகள் தற்போதே விற்று தீர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. உலகின் மிகப்பெரிய ஸ்டேடியங்களில் ஒன்றான மெல்போர்ன் ஸ்டேடியத்தில் ஒரு லட்சம் பேர் வரை ஒன்றாக அமைந்து போட்டியை ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.



