- Advertisement -
இந்திய கிரிக்கெட்

மழையால் பாதிக்கப்பட்ட முதல்நாள் ஆட்டம்.. ரசிகர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை – விவரம் இதோ

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது டிசம்பர் 14-ஆம் தேதி நேற்று பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி :

மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் வழங்கப்பட்ட சலுகை :

5.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் அரைமணி நேரத்திற்கு பிறகு மீண்டும் போட்டி துவங்கியது. பின்னர் 13 ஓவர் வரை போட்டி நடைபெற்றது.

- Advertisement -

பின்னர் 13.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் எடுத்திருந்தபோது இரண்டாவது முறையாக மழை பெய்தது. அப்போது மழை நிற்காத காரணத்தினால் இரு அணி வீரர்களும் உணவு இடைவேளையை எடுத்துக் கொண்டனர். பின்னர் தொடர்ந்து மழை பெய்ததால் முதல்நாள் ஆட்டம் மீண்டும் நடைபெறாமல் நிறைவுக்கு வந்தது.

இதன் காரணமாக முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக உஸ்மான் கவாஜா 19 ரன்களுடனும், மெக்ஸ்வீனி 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட வேளையில் ரசிகர்களுக்காக ஒரு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டது.

- Advertisement -

அதாவது போட்டியின் முதல் நாள் ஆட்டம் 15 ஓவர் ஓவர்களுக்கு கீழ் வீசப்பட்டதால் நேற்றைய இந்த போட்டியை காண டிக்கெட் எடுத்த ரசிகர்கள் அனைவருக்கும் போட்டிக்கான டிக்கெட் பணம் திருப்பி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது நாள் ஆட்டம் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : 0, 0, 0.. ஹாட்ரிக் கோல்டன் டக்.. திட்டமற்ற இந்தியாவை மீண்டும் நொறுக்கிய ஹெட்.. தனித்துவ உலக சாதனை

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அணியானது மூன்றாவது செஷன் வரை 3 விக்கெட்டுகளை இழந்து 276 ரன்கள் குவித்து பலமான நிலையில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி சார்பாக டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அசத்தியுள்ளார். அதேபோன்று ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் கடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -