இந்தியா – ஆஸி 4வது டெஸ்ட் நடைபெறும் மெல்போர்ன் மைதானம் எப்படி? புள்ளிவிவரம் – பிட்ச், வெதர் ரிப்போர்ட்

- Advertisement -

ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. 3 போட்டிகளின் முடிவில் 1 – 1* என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் அத்தொடரின் 4வது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி துவங்குகிறது. அந்தப் போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தி முன்னிலையை அதிகரிக்க ஆஸ்திரேலியா தயாராக உள்ளது.

மறுபுறம் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பு தக்க வைத்துக் கொள்ள அப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது. அதனால் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள அப்போட்டி புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு துவங்குகிறது. 1853ஆம் தோற்றுவிக்கப்பட்டு 90000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளை கொண்ட இந்த பழமையான மைதானத்தில் 1877 முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

மெல்போர்ன் மைதானம்:

இங்கு 116 போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலியா 67 வெற்றி 32 தோல்வி 17 ட்ராவை சந்தித்துள்ளது. இந்த மைதானத்தில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 4 வெற்றி 8 தோல்வி 2 டிராவை சந்தித்துள்ளது. கடைசியாக இந்த மைதானத்தில் விளையாடிய 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியை இந்தியா தோற்கடித்துள்ளது. அதனால் இம்மைதானம் இந்தியாவுக்கு கொஞ்சம் ராசியானதாகவே பார்க்கப்படுகிறது.

வெதர் ரிப்போர்ட்:

மெல்போர்ன் நகரில் இம்முறை மழை பெய்வதற்கு வாய்ப்பில்லை என்று அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. சொல்லப்போனால் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இம்முறை சுட்டெரிக்கும் வெயில் அடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதனால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:

2017க்குப்பின் மெல்போர்ன் பிட்ச் போட்டி ட்ராவை சந்திக்காத அளவுக்கு சமநிலையுடன் தயாரிப்பதாக அதன் தயாரிப்பாளர் மாட் பேஜ் கூறியுள்ளார். அதனால் மெல்போர்ன் பிட்ச்சில் இம்முறையும் நல்ல வேகம், பவுன்ஸ் ஆகியவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைப் பயன்படுத்தி போட்டியின் அனைத்து நாட்களிலும் துல்லியமாக பந்து வீசும் வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

இதையும் படிங்க: 4 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

மறுபுறம் பேட்ஸ்மேன்கள் சூழ்நிலையை உணர்ந்து நங்கூரமாக விளையாடினால் முதல் 2 – 3 நாட்களில் பெரிய ரன்கள் குவிக்க முடியும். பிட்ச் நாட்கள் செல்ல செல்ல பேட்டிங் செய்வதற்கு சவாலாகும். கடைசி 2 நாட்களில் ஸ்பின்னர்கள் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். 307, 312, 252, 172 என்பது இங்கு நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் சராசரி 4 இன்னிங்ஸ் ஸ்கோர். இங்கே 57 முதலில் பேட்டிங் செய்த அணிகளும் 42 முறை 2வதாக சேசிங் செய்த அணிகளும் வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement