ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதை அடுத்து இரண்டாவது போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் இந்தியா விளையாடுகிறது. டிசம்பர் ஆறாம் தேதி அடிலெய்ட் நகரில் பகல் இரவாக துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வது.
ஆனால் அதற்கு தகுந்தார் போல் விளையாடாத இந்தியா சுமாராக பேட்டிங் செய்து வெறும் 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அபாரமாக பேட்டிங் செய்து 337 ரன்கள் குவித்து அசத்தியது.
இந்தியா திணறல்:
அந்த அணிக்கு டிராவிஸ் ஹெட் வழக்கம் போல இந்திய அணியை அடித்து நொறுக்கி சதத்தை பதிவு செய்து 140 (141) ரன்கள் குவித்து மிரட்டினார். அவருடன் மார்னஸ் லபுஸ்ஷேன் 64, மெக்ஸ்வீனி 39 ரன்கள் எடுத்து அசத்திய நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக சிராஜ் 4, பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அதைத்தொடர்ந்து 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இந்தியாவுக்கு ராகுல் 7 ரன்னில் அவுட்டானார்.
மறுபுறம் நன்றாக ஆட்டத்தை துவங்கிய ஜெய்ஸ்வால் 24 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அடுத்து வந்த சுப்மன் கில் 28 ரன்களில் ஸ்டார்க் வேகத்தில் கிளீன் போல்ட்டான நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 11 ரன்னில் நடையை கட்டினார். அதற்கடுத்ததாக வந்த கேப்டன் ரோஹித் சர்மாவும் 6 ரன்களில் கமின்ஸ் வேகத்தில் போல்ட்டானார்.
தோல்வியை தவிர்க்க:
அதனால் 2வது நாள் முடிவில் 128-5 என திணறும் இந்திய அணி ஆஸ்திரேலியாவை விட இன்னும் 29 ரன்கள் பின்தங்கியுள்ளதால் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. களத்தில் ரிஷப் பண்ட் 28*, நிதிஷ் ரெட்டி 15* ரன்களுடன் உள்ளார்கள். முன்னதாக இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் நேற்று இரவு நேரத்தில் வெறும் 4.6% மட்டுமே பந்தை ஸ்டம்ப் லைனில் வீசினார்கள்.
இதையும் படிங்க: ஆஸி 157 ரன்ஸ் லீட்.. ஸ்மித்துக்கு எதிராக பும்ரா யாருமே செய்யாத சாதனை.. இந்தியா தாங்கி வரலாற்றை மாற்றுமா?
அதன் பயனாக அவர்கள் 71 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தனர். ஆனால் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் இன்று இரவு நேரத்தில் 11.6% பந்துகளை ஸ்டாம்ப் லைனில் வீசினார்கள். அதன் பயனாக 119 ரன்கள் கொடுத்த 5 விக்கெட்டுகளை எடுத்து இப்போட்டியில் கிட்டத்தட்ட தங்களுடைய அணியை வெற்றி பெற வைத்துள்ளார்கள். அந்த வகையில் இந்தியா இப்போட்டியில் பந்து வீச்சில் சொதப்பியது தோல்வியின் பிடியில் தள்ளியுள்ளது.



