இந்தியா – ஆஸி: முதல் ஒன்டே நடைபெறும் ஆப்டஸ் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம் – பிட்ச் ரிப்போர்ட்

Optus Stadium
- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் விளையாடும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் அக்டோபர் 19ஆம் தேதி துவங்குகிறது. அத்தொடரில் சுப்மன் கில் தலைமையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் கடைசி முறையாக ஆஸ்திரேலியாவில் விளையாட உள்ளதாக நம்பப்படுகிறது. அதனால் அத்தொடரை பார்ப்பதற்காக இருநாட்டு ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மொத்தம் 152 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 84 போட்டிகளில் வென்றுள்ள ஆஸ்திரேலியா வலுவான அணியாக திகழ்கிறது. இந்தியா 58 போட்டிகளில் வென்றது. எஞ்சிய 10 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன. இத்தொடர் நடைபெறும் ஆஸ்திரேலிய மண்ணில் அவ்விரு அணிகளும் 54 போட்டிகளில் மோதியுள்ளன.

- Advertisement -

ஆப்டஸ் மைதானம்:

அந்த 54 போட்டிகளில் ஆஸ்திரேலியா 38 வெற்றிகள், இந்தியா 14 வெற்றிகள் பெற்றுள்ளன. 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது. இத்தொடரின் முதல் போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருக்கும் ஆப்டஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி அக்டோபர் 19ஆம் தேதி காலை 9:00 மணிக்கு துவங்குகிறது. 2017ஆம் கட்டப்பட்ட இம்மைதானம் 65000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

2018 முதல் இங்கு நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 3 போட்டிகள் நடைபெற்றுள்ளன. ஆச்சரியப்படும் வகையில் அந்த 3 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா தோல்வியை சந்தித்துள்ளது. இம்முறை இங்கே ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் வரலாற்றில் முதல் முறையாக மோத உள்ளன.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:

உலகிலேயே ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இயற்கையாகவே அதிகப்படியான பவுன்ஸ் இருக்கும். அங்குள்ள புகழ்பெற்ற வாக்கா மைதானத்தில் உயிருக்கு ஆபத்தான இருந்தது. அதனாலேயே அம்மைதானத்தை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மூடிய ஆஸ்திரேலிய வாரியம் அருகிலேயே ஆப்டஸ் மைதானத்தை கட்டமைத்தது.

ஆனால் இந்த மைதானத்திலும் வேகம், பவுன்ஸ் ஆகியவை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது. அதன் காரணமாகவே இம்மைதானத்தில் பேட்டிங் செய்வது கடினமாக இருந்து வருகிறது. ஏனெனில் இதுவரை இங்கு நடைபெற்ற 3 போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் வெறும் 183 ஆகும். இம்மைதானத்தில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட ஸ்கோர் 153 ஆகும்.

இதையும் படிங்க: ரோஹித் ஒன்னும் சும்மா இல்ல.. இந்தியாவுக்காக 6 மாசம் உழைச்சு இதை குறைச்சுருக்காரு.. பர்வின் ஆம்ரே

எனவே இம்மைதானத்தில் பெரிய ஸ்கோர் அடிப்பதற்கு பேட்ஸ்மேன்கள் பவுன்ஸ் மற்றும் வேகத்தை சமாளித்து சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் விளையாடுவது அவசியமாகிறது. ஸ்பின்னர்கள் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இங்கு நடைபெற்ற 3 போட்டிகளில் 2 முறை சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீசி எதிரணியை குறைந்த ரன்னுக்குள் சுருட்டுவது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement