IND vs AUS : ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் 2 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு – லிஸ்ட் இதோ

AUs vs IND
- Advertisement -

இந்திய அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது. இந்த இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரானது நாளை ஜனவரி 15-ஆம் தேதியோடு முடிவடைகிறது. அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற இருக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியை ஏற்கனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ அறிவித்து விட்டது. இந்நிலையில் இந்த நியூசிலாந்து தொடருக்கு அடுத்து இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரானது பிப்ரவரி 9-ஆம் தேதி முதல் மார்ச் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் பங்கேற்க இருக்கும் இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் கேப்டனாக ரோகித் சர்மாவும், துணைக் கேப்டனாக கே.எல் ராகுலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை தவிர்த்து காயத்தால் அவதிப்பட்டு வந்த ரவீந்திர ஜடேஜா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். பேட்ஸ்மேன்களாக சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். விக்கெட் கீப்பர்களாக கே.எஸ் பரத், இஷான் கிஷன் ஆகிய இருவர் இடம் பிடித்துள்ளனர்.

- Advertisement -

சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களாக அஷ்வின், அக்சர் பட்டேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். பந்துவீச்சாளர்களாக குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இவர்களை தவிர்த்து இந்திய அணியின் அதிரடி வீரரான சூரியகுமார் யாதவுக்கும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : IND vs NZ : நியூசிலாந்து அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) சுப்மன் கில், 4) புஜாரா, 5) விராட் கோலி, 6) ஷ்ரேயாஸ் ஐயர், 7) கே.எஸ் பரத், 8) இஷான் கிஷன், 9) அஷ்வின், 10) அக்சர் படேல், 11) குல்தீப் யாதவ், 12) ரவீந்திர ஜடேஜா, 13) முகமது ஷமி, 14) முகமது சிராஜ், 15) உமேஷ் யாதவ், 16) ஜெய்தேவ் உனட்கட், 17) சூரியகுமார் யாதவ்.

Advertisement