எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஜெயிக்க இந்திய அணி கையிலெடுத்த பலே திட்டம் – விவரம் இதோ

Pitch
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே பெங்களூரு நகரில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது இந்த தொடரின் ஆரம்பத்திலேயே (0-1) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் இரண்டாவது போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

வெற்றிபெற இந்திய அணி போட்டுள்ள திட்டம் :

ஏனெனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்வதற்காக இந்த தொடர் இந்திய அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படும் வேளையில் எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது இந்திய அணிக்கு மேலும் சாதகம் இருக்கும். இதன் காரணமாக தற்போது இந்திய அணி முழு வீச்சில் தயாராகி வருகிறது.

- Advertisement -

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 24-ஆம் தேதி புனே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்காக தற்போது இரு அணி வீரர்களும் அங்கு சென்று பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தொடரின் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பின்னர் அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மீண்டும் தங்களது பழைய வாடிக்கைக்கு திரும்பியுள்ளது.

அதாவது பெங்களூரு மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த வேளையில் அடுத்து வரும் இரண்டு போட்டிகளுக்கான மைதானங்களும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட இருக்கிறது. ஏனெனில் இந்திய அணி சொந்த மண்ணில் சுழற்பந்து வீச்சில் எவ்வளவு பலம் வாய்ந்த அணி என்பது அனைவருக்கும் தெரியும்.

- Advertisement -

அந்த வகையில் இனிவரும் இரண்டு போட்டிகளும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச்களில் அமைக்கப்படும் என்று தெரிகிறது. இதன் மூலம் அடுத்து வரும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் ஆஸ்திரேலிய தொடரின் போது அது இந்திய அணிக்கு சாதகமான விடயமாக மாறும்.

இதையும் படிங்க : இப்போ சொன்னா கூட இந்தியாவுக்கு எதிராக இதை செய்ய தயார்.. ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் மெசேஜ்

ஒருவேளை இந்த தொடரில் இந்திய அணி தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் 5 போட்டிகளில் நான்கு வெற்றிகளை பெற வேண்டும் என்ற இக்கட்டான நிலையை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே தற்போது இந்திய அணி ஆடுகளங்களை நமது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றவாறு மாற்ற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement