இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது இன்னும் ஒரு வாரத்தில் துவங்க உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெறும் இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே சென்னை வந்தடைந்து பயிற்சி ஈடுபட்டு வருகிறது.
வரலாறு படைக்க காத்திருக்கும் இந்திய அணி :
ரோகித் சர்மா தலைமையிலான 16 பேர் கொண்ட வீரர்கள் அனைவரும் இந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்கும் இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியை வீழ்த்தும் பட்சத்தில் டெஸ்ட் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு மாபெரும் வரலாற்று சாதனையை படைக்க காத்திருக்கிறது.
கடந்த 1932 ஆம் ஆண்டு இந்தியா தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடியது அதன் பின்னர் தற்போது 92 ஆண்டுகளாக இதுவரை இந்திய அணி 579 போட்டிகளின் விளையாடி உள்ளது.
அதில் 178 வெற்றிகள் 178 தோல்விகள் மற்றும் 222 டிரா என தற்போது வெற்றி மற்றும் தோல்வி சதவீதம் 50% சரிசமமாக உள்ளது. இந்நிலையில் இந்திய அணி வங்கதேச அணியை முதல் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தும் பட்சத்தில் அது இந்திய அணியின் 179 வது வெற்றியாக அமையும்.
அதோடு முதன்முறையாக டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை விட அதிக வெற்றி சராசரி பெற்ற அணியாக இந்திய அணி மாறும். இதில் குறிப்பிடத்தக்க வேண்டிய விடயம் யாதெயில் இந்திய அணி கடந்த 1952 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தான் முதல் முறையாக வெற்றியை பதிவு செய்திருந்தது.
இதையும் படிங்க : 124 ரன்ஸ்.. திரும்பி அடிக்கும் தமிழக வீரர் ஜெகதீசன்.. ருதுராஜ் அணிக்கு காத்திருக்கும் மெகா சவால்
அதன் பிறகு தற்போது 72 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்த காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே ஆன்லைன் மூலம் விற்கப்பட்டு வருகிறது. இந்த சென்னை டெஸ்ட்டில் பல நட்சத்திர வீரர்களும் பங்கேற்க இருப்பதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



