டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்திய அணி செய்த வரலாற்று சம்பவம் – விவரம் இதோ

IND
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி ஏற்கனவே நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியில் வீழ்த்தி அசத்தியது.

இந்திய அணி நிகழ்த்திய சாதனை :

அதன்மூலம் இந்த தொடரில் இந்திய அணியானது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நேற்று டெல்லி நகரில் நடைபெற்று முடிந்தது.

- Advertisement -

இந்த போட்டியிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்த தொடரினை தற்போது இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை வகித்துள்ளது.

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது. பின்னர் 222 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே குவித்ததால் 86 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது டி20 வரலாற்றில் இந்திய அணி இதுவரை படைக்காத ஒரு சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக ஏழு வீரர்கள் பந்துவீசி ஏழு பேருமே விக்கெட்டை கைப்பற்றியது சாதனையாக மாறியுள்ளது.

இதையும் படிங்க : 41/3 என சரிந்த போது.. தோனி பாய் சொன்னதை தான் செஞ்சேன்.. இந்திய அணியை மீட்டது பற்றி ரிங்கு பேட்டி

இந்திய அணியில் பேட்ஸ்மன்களும் பந்து வீச வேண்டும் என்று கம்பீர் உறுதியாக இருக்கும் வேளையில் நேற்றைய போட்டியில் ஏழு வீரர்கள் இந்திய அணிக்காக பந்துவீசினர். அதேபோன்று முக்கிய ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியாவே நேற்று ஒரு ஓவர் கூட வீசவில்லை. அந்த அளவிற்கு நேற்று மற்ற வீரர்கள் அனைவரும் பந்துவீச்சில் பங்கேற்று சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement