டி20 உலககோப்பை தொடர் முடிந்த கையோடு அடுத்த அசைன்மென்ட்க்கு புறப்பட இந்திய அணி – விவரம் இதோ

IND
- Advertisement -

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அவர்களை வீழ்த்தி 17 ஆண்டுகள் கழித்து 2 ஆவது முறையாக டி20 உலககோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது.

இப்படி ஒருபுறம் இந்திய அணி கோப்பையை கைப்பற்றி சில நாட்கள் மட்டுமே ஆன நிலையில் தற்போது இந்திய அணியானது தங்களது அடுத்த தொடருக்கான பயணத்தை ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில் ஏற்கனவே அட்டவணை படுத்தப்பட்ட படி :

- Advertisement -

ஜூலை மாதம் நடைபெற இருக்கும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் ஐபிஎல் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா, ரியான் பராக், துஷார் தேஷ்பாண்டே ஆகியோருக்கு இடம் கிடைத்தது.

அது தவிர்த்து டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றிருந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே ஆகியோர் மட்டுமே இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். அவர்களோடு பல்வேறு இளம் வீரர்களுக்கு இந்த ஜிம்பாப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

- Advertisement -

இந்திய அணியின் சீனியர் வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இந்த தொடரில் விளையாட இருப்பதினால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : முழுசா சொல்ல முடியாது.. ஆனா இதுல வாசிம் அக்ரமை விட ஜீனியஸ் பும்ரா கிரேட் பவுலர்.. மைக்கேல் வாகன்

இந்நிலையில் ஜூலை 6-ஆம் தேதி துவங்கவுள்ள இந்த ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அந்நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றதை இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் வெளியிட்டு இந்திய அணி அடுத்த தொடருக்காக தயாராகி சென்று கொண்டிருக்கிறது என்று பதிவிட்டுள்ளது. மேலும் இந்த தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ் லட்சுமணன் செயல்படுவார் என்பது உறுதியாகி உள்ளது.

Advertisement