இங்கிலாந்து அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது தற்போது அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இந்திய அணி நிகழ்த்திய மோசமான சாதனை :
இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டியில் முடிவில் இந்திய அணி இந்த தொடரை ஏற்கனவே இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 12-ம் தேதி துவங்கிய மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது.
அந்த வகையில் இன்று துவங்கி நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 356 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக கில் 112 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 78 ரன்களையும், விராட் கோலி 52 ரன்களையும் குவித்தனர்.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் இந்த தொடரினை கைப்பற்றும் என்று தெரிகிறது. இந்நிலையில் என்னதான் இந்த ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றி இருந்தாலும் இந்த போட்டியின் டாசின் போது டாசில் தோற்ற இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் நெதர்லாந்து அணிக்கு பின்னர் மோசமான சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளது.
அந்த வகையில் இந்திய அணி நிகழ்த்திய மோசமான சாதனை யாதெனில் : நெதர்லாந்து அணி கடந்த மார்ச் 2011 முதல் ஆகஸ்ட் 2013 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 11 ஒருநாள் போட்டிகளில் டாசில் தொடர்ந்து தோல்வியை சந்தித்திருந்தது.
இதையும் படிங்க : ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்கள் சச்சின், விராட் கோலியை முந்திய சுப்மன் கில் – சூப்பர் ரெக்கார்டு
அதற்கடுத்து தற்போது இந்திய அணி கடந்த 2023 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிக்கு பின்னர் இதுவரை தொடர்ந்து பத்து ஒரு நாள் போட்டிகளில் டாசில் தோல்வியை சந்தித்து தொடர்ச்சியாக 10 ஒருநாள் போட்டியில் டாசில் தோல்வியை சந்தித்த இரண்டாவது அணி என்கிற மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



