IND vs BAN : வங்கதேச டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு – முழுலிஸ்ட் இதோ

ind
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் அரையிறுதி போட்டியை நோக்கி தற்போது இந்திய அணி பயணித்து வரும் வேளையில் இறுதிப்போட்டியில் விளையாடி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இந்த டி20 உலகக் கோப்பை தொடரானது வரும் நவம்பர் 13-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள வேளையில் அடுத்தடுத்ததாக இந்திய அணி நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான தொடர்களில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இதில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட வேளையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியையும் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அறிவித்துள்ளது.

- Advertisement -

ஏற்கனவே வங்கதேச அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட பின்னர் தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற உள்ள இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது டிசம்பர் 14-ஆம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்த டெஸ்ட் தொடருக்கான அணியில் கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக கே.எல் ராகுலும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை தவிர்த்து மேலும் 16 வீரர்கள் இந்த இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர். இதில் சீனியர் வீரரான ரஹானேவிற்கு இந்த தொடரிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் இந்த தொடரில் விளையாட இருக்கிறார்.

- Advertisement -

அதேபோன்று இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் கூடுதல் விக்கெட் கீப்பராக கே.எஸ் பரத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்படி வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 16 வீரர்கள் கொண்ட இந்திய டெஸ்ட் அணி இதோ :

இதையும் படிங்க : கே.எல் ராகுல் ரன்ஸ் அடிக்கனும்னா கண்டிப்பா அவர் வந்து பேசியே ஆகனும் – சுனில் கவாஸ்கர் கருத்து

1) ரோஹித் சர்மா (கேப்டன்), 2) கே.எல் ராகுல் (து.கேப்டன்), 3) சுப்மன் கில், 4) சதீஸ்வர் புஜாரா, 5) விராட் கோலி, 6) ஷ்ரேயாஸ் ஐயர், 7) ரிஷப் பண்ட், 8) கே.எஸ் பரத், 9) ரவிச்சந்திரன் அஷ்வின், 10) ரவீந்திர ஜடேஜா, 11) அக்சர் படேல், 12) குல்தீப் யாதவ், 13) ஷர்துல் தாகூர், 14) முகமது ஷமி, 15) முகமது சிராஜ், 16) உமேஷ் யாதவ்.

Advertisement