- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி எந்தெந்த அணிகளுடன் மோதயிருக்கிறது? – போட்டிகள் எங்கு நடைபெறுகிறது? – முழு தகவல் இதோ

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது டி20 உலக கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி மூன்று போட்டிகளிலும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வெற்றியுடன் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இதன் காரணமாக இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் குறித்த முழு விவரங்களை இங்கு பார்க்கலாம். அந்த வகையில் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணி என 2 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

- Advertisement -

அதேபோன்று குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் சி பிரிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் குரூப் டி பிரிவில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இந்த 8 அணிகளையும் இரண்டு பிரிவுகளாக பிரித்து குரூப் 1-ல் : இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளும் குரூப் 2-ல் : அமெரிக்கா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

- Advertisement -

இந்த 2 பிரிவில் இருக்கும் நான்கு அணிகளுமே மற்ற அணிகளுடன் ஒரு போட்டியில் விளையாடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் முடிவில் வெற்றிகளின் அடிப்படையில் 2 குரூப்பில் இருந்தும் டாப் 2 இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இப்படி ஒருத்தர மட்டும் குற்றம் சொல்வது தவறு.. இப்படியெல்லாம் பண்ணாதீங்க ப்ளீஸ் – பாபர் அசாம் கடுப்பு

இந்நிலையில் இந்த சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தங்களது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை ஜூன் 20-ஆம் தேதி எதிர்கொண்டு விளையாட இருக்கிறது. அதன்பிறகு ஜூன் 22-ஆம் தேதி நடைபெறும் போட்டியில் வங்கதேச அணியையும், கடைசி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்த மூன்று போட்டியில் இரண்டு போட்டியில் வெற்றி பெற்றால் கூட இந்திய அணியால் அரையிறுதிக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -