இந்த 3 மாற்றங்களை செய்தால் மட்டுமே இங்கிலாந்து அணிக்கெதிராக வெற்றி பெறமுடியும் – மாற்றங்கள் இதோ

IND

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று முன்தினம் துவங்கியது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் வெறும் 124 ரன்களை மட்டும் குவிக்க அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து அணி 15 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது போட்டி போட்டி இன்று நடைபெறவுள்ளது.

eng

இந்நிலையில் இந்திய அணியில் மூன்று முக்கிய மாற்றங்களை செய்தால் மட்டுமே இந்திய அணியால் வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியும் என்று கருதப்படுகிறது. அந்த வகையில் இந்திய அணி செய்ய வேண்டிய முக்கிய மாற்றங்களில் ஒன்று துவக்க வீரராக ரோகித் சர்மாவை களமிறக்குவது தான். ஏனெனில் இந்த தொடருக்கு முன்னர் ராகுல் மற்றும் ரோஹித் ஆகியோர் துவக்கவீரர்களாக களம் இறங்குவார்கள் என்று கூறப்பட்டது.

ஆனால் இறுதி நேரத்தில் ராகுலுடன் தவானை களமிறக்கினார்கள். ஆனால் இவர்கள் கூட்டணி முதல் போட்டியில் எடுபடவில்லை. எனவே நிச்சயம் ரோஹித் துவக்கவீரராக களமிறங்க வேண்டும் அப்போது மட்டுமே இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை கொடுக்க முடியும். அதற்கு அடுத்து இரண்டாவது மாற்றமாக சாகளுக்கு பதிலாக ராகுல் சாகரை கொண்டுவர வேண்டும். ஏனெனில் கடந்த சில போட்டிகள் ஆகவே தொடர்ந்து சாஹல் அதிகளவு ரன்களை கொடுத்து வருகிறார்.

Rohith

முதல் போட்டியில் கூட 44 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரே விக்கெட் கைப்பற்றினார். இந்நிலையில் அவருக்கு பதிலாக இளம் வீரரான ராகுல் சாஹரை அணிக்குள் கொண்டு வரலாம். அதேபோன்று மூன்றாவது முக்கிய மாற்றமாக ஷர்துல் தாகூர்க்கு பதிலாக டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்படும் தீபக் சாகரை அணிக்குள் கொண்டு வர வேண்டும். ஏனெனில் தாகூர் பவுலிங்கில் சிறப்பாக விக்கெட்டுகளை கைப்பற்றினாலும் ரன்களை அதிகளவு விட்டுக் கொடுக்கிறார்.

- Advertisement -

Chahar-1

ஆனால் அவரை விட தீபக் சாகர் சிறப்பாக பந்துவீசி பவர்பிளே ஓவர்களிலேயே விக்கெட் வீழ்த்தும் திறன் உடையவர். எனவே அவரும் இந்திய அணிக்குள் வந்தால் அணிக்கு பலம் அதிகரிக்கும் இந்த மூன்று முக்கிய மாற்றங்களை செய்தாலே இந்திய அணி எளிதில் வெற்றி பாதைக்கு திரும்பும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.