டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் : 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு – முழு லிஸ்ட் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி நாளை மறுதினம் 18 ஆம் தேதி சவுதாம்ப்டன் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த தொடருக்கான 20 பேர் கொண்ட மெயின் வீரர்கள் மற்றும் ஐந்து பேக்கப் வீரர்கள் என மொத்தம் 25 பேர் கொண்ட இந்திய அணி ஜூன் மாதம் மூன்றாம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தனர்.

INDvsNZ

- Advertisement -

அதன் பின்னர் அங்கு சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் தற்போது விராட் கோலி தலைமையிலான ஒரு அணி மற்றும் கே.எல் ராகுல் தலைமையிலான மற்றொரு அணி என இரு அணிகளாகப் பிரிந்து பயிற்சி போட்டியிலும் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் யார் யார் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் உள்ளது.

இந்நிலையில் பிசிசிஐ இந்த இறுதிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட ஷார்ட்லிஸ்ட் அணியை வெளியிட்டுள்ளது. அதில் கோலி தலைமையிலான 15 இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் இந்த லிஸ்டை பி.சி.சி.ஐ அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த அணியில் வாஷிங்டன் சுந்தர் ஷர்துல் தாகூர் போன்ற இளம் வீரர்களுக்கு இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

IND

15 பேர் கொண்ட அணி விபரம் இதோ :

ரோகித் ஷர்மா, சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ராஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சாஹா (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.

Advertisement