சர்வதேச டி20 கிரிக்கெட்டில் எந்தவொரு அணியும் செய்யாத வரலாற்று சாதனையை நிகழ்த்திய – இந்திய அணி

IND-Record
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது டி20 போட்டியானது நவம்பர் எட்டாம் தேதி டர்பன் நகரில் உள்ள கிங்ஸ் மீட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்திய அணி படைத்த சாதனை :

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரரான சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 107 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 17.5 ஓவர்களில் 141 ரன்களில் சுருண்டது. இதன்காரணமாக இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் வெற்றி பெற்றது மட்டுமின்றி இந்த போட்டியில் இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் அடித்ததன் காரணமாக வரலாற்று சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளது. அந்த வகையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக முறை 200-க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த அணியாக இந்திய அணி சாதனை நிகழ்த்தியுள்ளது.

- Advertisement -

இந்த ஆண்டு மட்டும் இந்திய அணி ஏழு முறை 200-க்கும் மேற்பட்ட ரன்களை சர்வதேச டி20 போட்டியில் அடித்துள்ளது. அதேபோன்று கடந்த ஆண்டு டி20 போட்டிகளில் ஏழு முறை 200-க்கு மேற்பட்ட ரன்களை குவித்திருந்தது. இதன் மூலம் இரண்டு ஆண்டுகள் அதிக முறை 200-ரன்களுக்கு மேல் அடித்த அணியாக இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க : 1889 ரன்ஸ்.. முதல் டி20யில் நியூஸிலாந்தை வீழ்த்திய இலங்கை.. குசால் பெரேரா வரலாற்று சாதனை

அதோடு ஒட்டுமொத்தமாக இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 38 முறை இந்திய அணி 200 ரன்களை கடந்துள்ளது. இந்திய அணிக்கு அடுத்து ஆஸ்திரேலியா 23 முறையும், தென்னாப்பிரிக்கா 22 முறையும், நியூசிலாந்து 21 முறையும், இங்கிலாந்து 20 முறையும் 200-க்கும் மேற்பட்ட ரன்களை டி20 போட்டியில் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement