- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2022-ல நடந்ததுக்கு பழிதீர்க்க காத்திருக்கும் ரோஹித்தின் படை.. இந்தமுறை திருப்பி குடுக்க வேண்டிய நேரம் வந்தாச்சு

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் சூப்பர் 8 சுற்றில் 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்ற வேளையில் முதலாவது அரையிறுதி போட்டியானது டிரினிடாட் நகரில் நடைபெற்று முடிந்தது.

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதிய நிலையில் இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தான அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிட்டது.

- Advertisement -

அதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் மோத இருக்கும் இரண்டாவது அணி எது என்பது இரண்டாவது அரையிறுதி போட்டியின் முடிவில் தெரியவரும். அந்த முக்கியமான இரண்டாவது அரையிறுதி போட்டியானது நாளை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பதனால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நாளை இரவு இந்திய நேரப்படி எட்டு மணிக்கு இந்த போட்டி துவங்குகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று கடந்த 2022-ஆம் ஆண்டு சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரோகித் சர்மாவின் படை தற்போது தீவிரமாக தயாராகி வருகிறது. ஏனெனில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய வேளையில் அந்த போட்டியில் இந்திய அணி 168 ரன்களை குவிக்க பின்னர் 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதையும் படிங்க : 10 வருட ஐசிசி தோல்விக்கு அதான் காரணம்.. இம்முறை செமி ஃபைனலில் இந்த தப்பை செய்ய மாட்டோம்.. ரோஹித் பேட்டி

அந்த இலக்கினை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி விக்கெட் எதுவும் இழக்காமல் இலக்கினை எட்டி இந்திய அணியை மோசமான தோல்விக்கு தள்ளினர். இந்நிலையில் அதற்கு பழி தீர்க்கும் விதமாக தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு அதே அரையிறுதியில் எதிர்வர இருப்பதால் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று வீரர்களும் கடினமான பயிற்சியினை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -