3ஆவது டி20 : இன்றைய போட்டிக்கான இந்திய அணி இதுதான் – உத்தேச வீரர்களின் பட்டியல் இதோ

IND

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வீழ்த்தியது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பதிலடி கொடுத்தது. இதன் காரணமாக தற்போது இந்த தொடர் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி இன்று இரவு அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் என்பதனால் இந்த போட்டி இரு அணிகளுக்கும் இடையே மிகக் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஓய்வில் இருந்த ரோஹித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்புவதால் அணியின் தேர்வு எவ்வாறு இருக்கும் என்று அதிக அளவு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியலை இந்த பதிவில் காண்போம். அதன்படி கடந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றதால் அணியில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது என்று தெரிகிறது.

Rohith

அணியில் ஒரே ஒரு மாற்றமாக ரோகித் சர்மா துவக்க வீரராக அணியில் இணைவார் என்றும் அவருக்கு பதிலாக முதல் இரண்டு போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராகுல் அணியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று கூறப்படுவது. மற்றபடி இந்திய அணியில் வேறு எந்த மாற்றமும் இருக்காது என்றும் சென்ற போட்டியில் விளையாடிய அதே அணியுடன் ரோகித் மட்டும் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ishan 1

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டிக்கான உத்தேச அணி இதோ : 1) ரோஹித் சர்மா, 2) இஷான் கிஷன், 3) விராட் கோலி, 4) ரிஷப் பண்ட், 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6) சூரியகுமார் யாதவ், 7) ஹார்டிக் பாண்டியா, 8) வாஷிங்க்டன் சுந்தர், 9) புவனேஷ்வர் குமார், 10) ஷர்துல் தாகூர், 11) யுஸ்வேந்திர சாஹல்