இரண்டாவது டி0 போட்டி : இன்றைய போட்டிக்கான இந்திய அணி இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

IND

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இந்நிலையில் தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி இன்று மாலை நடைபெற உள்ளது.

indvseng

இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறும் வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் இந்திய அணியின் தவறான தேர்வினால் தான் தோல்வி கிடைத்தது என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். நிலையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் இருக்கும் மட்டுமே இருக்கும் என்று மட்டுமே கூறப்படுகிறது.

அந்த வகையில் ஏற்கனவே கோலி ரோகித் சர்மா இந்த போட்டியில் ஆட மாட்டார் என்று கூறி விட்டதால் மீண்டும் தவான் மற்றும் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்குவர். அதன் பின்னர் மிடில் ஆர்டரில் ஐயர் சென்ற போட்டியில் அரைசதம் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர் அணியில் நீடிப்பார்.

shreyas

அதனைத் தவிர புதுமுக வீரர்கள் யாருக்கும் பாதிப்பு கிடையாது. அணியில் ஒரே ஒரு மாற்றமாக சென்ற போட்டியில் மூன்று ஸ்பின்னர்களுடன் விளையாடிய இந்திய அணி இம்முறை அக்ஷர் பட்டேல் நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக நவ்தீப் சைனி உடன் களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதனால் இன்றைய போட்டியில் ஒரு மாற்றம் மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது. இன்றைய போட்டிக்கான உத்தேச அணி பட்டியல் இதோ : கே.எல் ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, வாசிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல்