இங்கிலாந்து அணிக்கெதிரான 4 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

IND

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இந்திய அணி தக்கவைத்துள்ளது.

ind

இந்நிலையில் நாளை துவங்க இருக்கும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ கூட இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவது உறுதியாகிவிடும். இதன் காரணமாக நாளைய போட்டி இந்திய அணிக்கு ஒரு முக்கிய போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாளைய போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் பற்றிய தொகுப்பு தான் இந்த பதிவில் காண உள்ளோம்.

அதன்படி நாளைய போட்டியிலும் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வரும் ரோகித் சர்மா மற்றும் கில் ஆகிய துவக்க ஜோடியாக இடம்பெறுவார்கள். அவர்களைத் தொடர்ந்து புஜாரா, கோலி, ரஹானே ஆகியோர் மிடில் ஆர்டரிலும் ரிஷப் பண்ட், அஸ்வின், அக்சர் பட்டேல் ஆகியோர் அதனை தொடர்ந்தும் விளையாடுவார்கள். அதனைத் தொடர்ந்து மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக வாஷிங்டன் சுந்தர் அல்லது குல்தீப் யாதவ் இவர்கள் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

sundar 3

மேலும் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவும் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரும் இடம் பெற வாய்ப்பு உள்ளது. ஏனெனில் ஏற்கனவே நான்காவது போட்டிக்கு முன்னர் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா விருப்ப ஓய்வு கேட்டு அணியில் இருந்து விலகி உள்ளது குறிப்பிடத்தக்கது. நாளைய போட்டிக்கான இந்திய அணி வீரர்களின் உத்தேச பட்டியல் இதோ :

- Advertisement -

Siraj 2

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) புஜாரா, 4) விராட் கோலி, 5) ரஹானே, 6) ரிஷப் பண்ட், 7) அஷ்வின், 8) அக்சர் படேல், 9) வாஷிங்க்டன் சுந்தர் (அ) குல்தீப் யாதவ், 10) இஷாந்த் சர்மா, 11) முகமது சிராஜ்