4 ஆவது டி20 போட்டி : இன்றைய போட்டிக்கான பிளேயிங் லெவன் இந்திய அணி இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

INDvsENG

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து அணி 2 க்கு 1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று இரவு அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

INDvsENG

இன்றைய போட்டிக்கான வெற்றி வாய்ப்பிலும் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் பலத்துடன் திகழும் இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் அதே வேளையில் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமநிலை வகிக்க இந்திய அணி கடுமையான போராட்டத்தை அளிக்கும் என்று தெரிகிறது.

மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்து போட்டி இன்னும் சுவாரசியமாக அமையும் என்பதால் இந்திய அணி இந்த போட்டியை வெற்றிபெற கடுமையாக போராடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள் என்பது குறித்த ஒரு அலசலை இந்த பதிவில் காணலாம். சென்ற போட்டியின் முடிவிலேயே ராகுல் இந்த போட்டியிலும் விளையாடுவார் என்று கூறியுள்ளதால் துவக்க வீரர்களுக்கான இடத்தில் எந்த மாற்றமும் இருக்காது.

sky

அதன்படி ரோகித் மற்றும் ராகுல் ஆகியோர் இந்த போட்டியில் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள் என்று கூறப்படுகிறது. அதற்கடுத்து மிடில் ஆர்டரில் இஷான் கிஷன் மற்றும் விராட் கோலி விளையாடுவது உறுதி. அதே போன்று இந்திய அணியில் இன்று ஒரு மாற்றம் இருந்தால் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதில் சூர்யகுமார் யாதவ் இடம் பிடிக்கலாம். அதை தவிர அணியில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வேறு எந்த மாற்றமும் இருக்காது. இன்றைய போட்டிக்கான இந்திய அணி இதோ :

- Advertisement -

ishan 1

இன்றைய போட்டிக்கான பிளேயிங் லெவன் உத்தேச அணி இதோ :

1) ரோஹித் சர்மா, 2) கே.எல். ராகுல், 3) இஷான் கிஷன், 4) விராட் கோலி, 5) ஐயர் (அ) சூரியகுமார் யாதவ், 6) ரிஷப் பண்ட், 7) ஹார்டிக் பாண்டியா, 8) வாஷிங்க்டன் சுந்தர், 9) ஷர்துல் தாகூர், 10) புவனேஷ்வர் குமார், 11) யுஸ்வேந்திர சாஹல்