இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இதுதான் – பட்டியல் இதோ

INDvsENG
- Advertisement -

ஆஸ்திரேலியா தொடரை வெற்றிகரமாக முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ள இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி அந்த சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா வர இருக்கிறது. அதன்படி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

INDvsENG 1

- Advertisement -

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5ஆம் தேதி துவங்குகறது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. முதல் இரண்டு போட்டியும் சென்னையில் நடைபெற அடுத்த இரண்டு போட்டியும் அகமதாபாத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த தொடரின் 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முதல் இரு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி ஏற்கனவே பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று இங்கிலாந்து அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ, ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் இடம்பெறவில்லை. அவர்களது இந்த தவறான தேர்வு தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகி நிலையிலும் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோரது சேர்க்கை இங்கிலாந்து அணிக்கு பலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Gill

இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் பிளேயிங் லெவனை தான் நாம் இந்த பதிவில் காண உள்ளோம். இந்த வீரர்களின் தேர்வு உத்தேசமாக நம்மால் கணிக்கப்பட்டது. அது தவிர பிசிசிஐ ஆல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது அல்ல. இந்த பதிவில் இருக்கும் வீரர்களின் பட்டியலில் சிறிது மாறுதல் இருந்தாலும் ஆச்சரியமில்லை.

ind-2

இருப்பினும் இந்த 11 பேர் தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளதாக நாம் கணித்திருக்கின்றோம். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் இதோ : 1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) புஜாரா, 4) விராட் கோலி, 5) ரஹானே, 6) பண்ட், 7) சுந்தர், 8) அஷ்வின், 9)இஷாந்த் சர்மா, 10) பும்ரா, 11) சிராஜ்

Advertisement