முதல் டி20 போட்டி : நாளைய இங்கிலாந்து அணிக்கெதிரான இந்திய அணி இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

IND

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை மார்ச் 12-ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இந்த ஐந்து போட்டிகளுமே அகமதாபாத் நகரிலுள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்று மற்றும் இறுதிப் போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற இருப்பதால் இந்த போட்டியில் இந்திய அணி எவ்வாறு செயல்படுகிறது என்று பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

INDvsENG

இந்நிலையில் நாளைய போட்டியில் விளையாடும் இந்திய அணி குறித்த உத்தேச பட்டியலை தான் இந்த பதிவில் காண உள்ளோம். அதன்படி இந்த முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியில் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் களம் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக ஷிகர் தவான் அணியில் விளையாடமாட்டார்.

மூன்றாவது இடத்தில் கேப்டன் விராட் கோலியும், நான்காவது இடத்தில் அறிமுக வீரரான சூர்யகுமார் யாதவ் விளையாட அதிகமான வாய்ப்பு உள்ளது. அடுத்து ஐந்தாவது இடத்தில் ரிஷப் பண்ட்டும், ஆறாவது இடத்தில் ஆல்ரவுண்டர் ஹர்டிக் பண்டியா விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

pandya

ஏழாவது இடத்தில் தமிழக ஆல்ரவுண்டர் சுந்தரும், மற்றொரு சுழற்பந்து வீச்சாளராக சாஹலும் விளையாடுவார்கள் மேலும் 3 வேகப்பந்து வீச்சாளராக புவனேஸ்வர் குமார், ஷர்துல் தாகூர், தீபக் சஹர் ஆகியோர் விளையாடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களில் யாரேனும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் அவருக்கு பதில் சைனி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Chahal

நாளைய முதல் டி20 போட்டிக்கான உத்தேச அணி இதோ :

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) ரிஷப் பண்ட், 6) ஹார்டிக் பாண்டியா, 7) வாஷிங்க்டன் சுந்தர், 8) சாஹல், 9) புவனேஷ்வர் குமார், 10) ஷர்துல் தாகூர், 11) தீபக் சாகர் (அ) சைனி