இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது ஆகஸ்ட் 4ஆம் தேதி நாளை முதல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து சாம்பியன்ஷிப்பை தவற விட்டதால் இந்திய அணியின் மீது விமர்சனங்கள் அதிக அளவில் எழுந்தன. இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடரில் வெற்றி பெற்று அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்திய அணி தொடரை கைப்பற்றும் முனைப்பில் விளையாட இருக்கிறது.

INDvsENG 1

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடருக்கு முன்னர் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஏற்கனவே சில வீரர்கள் அணியில் இருந்து வெளியேறிய நிலையில் மாயங்க் அகர்வால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது என்ற தகவல் நேற்று வெளியானது. இந்நிலையில் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் யார் ? யார் ? அணியில் எந்தெந்த வீரர்கள் இடத்தில் மாற்றம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

அந்தவகையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை நாங்கள் இங்கே உங்களுக்கு தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி அணியில் பேட்டிங் ஆர்டரில் இரண்டு மாற்றங்கள் மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது. துவக்க வீரராக ரோகித்துடன் ராகுலும், மிடில் ஆர்டரில் ஜடேஜாவுக்கு பதிலாக ஹனுமா விஹாரி ஆகியோரும் களம் இறங்குவார்கள்.

Vihari

அதேபோன்று காயமடைந்த அனுபவ வீரரான இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக இளம் வீரரான முகமது சிராஜ் அணியில் இணைக்கப்படுவது தவிர மற்ற படி மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது. முதல் டெஸ்ட் போட்டிக்கான உத்தேச அணி இதோ :

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) புஜாரா, 4) விராட் கோலி, 5) ரஹானே, 6) பண்ட், 7) விஹாரி, 8) அஷ்வின், 9) சிராஜ், 10) முகமது ஷமி, 11) பும்ரா

Advertisement