
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது நாளை நவம்பர் 30-ஆம் தேதி துவங்குகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி ராஞ்சி நகரில் நடைபெறவுள்ள வேளையில் இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தற்போது ராஞ்சி சென்றடைந்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணியானது அந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் விளையாட இருப்பதினால் இந்த ஒருநாள் போட்டிகளின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நாளை துவங்கவுள்ள இந்த முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்பது குறித்த உத்தேச பட்டியலை இந்த பதிவில் காணலாம். அந்த வகையில் துவக்க வீரர்களாக ரோகித் சர்மாவுடன் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
மூன்றாவது இடத்தில் விராட் கோலியும், நான்காவது இடத்தில் திலக் வர்மாவும் விளையாட வாய்ப்புள்ளது. ஐந்தாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கேப்டன் கே.எல் ராகுலும், ஆறாவது இடத்தில் நிதீஷ்குமார் ரெட்டியும் விளையாட வாய்ப்பு இருக்கிறது. ஏழு மற்றும் எட்டு ஆகிய இடங்களில் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ரவீந்திர ராஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளது.
மீதமுள்ள மூன்று இடங்களில் வேகப்பந்து வீச்சாளர்களாக அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரும் சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவுக்கும் இடம் கிடைக்கலாம் என்று தெரிகிறது. அந்த வகையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : பண்ட் மேல தப்பில்ல.. தோல்விக்கு பிசிசிஐ பணத்தாசையும் காரணம்.. டிராவிட், லக்ஷ்மன் மாதிரி யாருமில்ல.. கபில் தேவ்
1) ரோஹித் சர்மா, 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) விராட் கோலி, 4) திலக் வர்மா, 5) கே.எல் ராகுல், 6) நிதீஷ் ரெட்டி, 7) ரவீந்திர ஜடேஜா, 8) வாஷிங்டன் சுந்தர், 9) குல்தீப் யாதவ், 10) ஹர்ஷித் ராணா, 11) அர்ஷ்தீப் சிங்.