IND vs IRE : நாளைய 3 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

IND-vs-IRE
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருந்தாலும் ஹார்டிக் பாண்டியாவின் தலைமையிலான அணி டி20 தொடரை அவர்களிடம் இழந்தது. அதனை தொடர்ந்து முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட வேளையில் பும்ரா தலைமையிலான இந்திய அணி தற்போது அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

IND-vs-IRE

- Advertisement -

அதன்படி 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்த தொடரை கைப்பற்றியுள்ளது.

அதனை தொடர்ந்து நாளை ஆகஸ்ட் 23-ஆம் தேதி நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியுடன் இந்த தொடரானது நிறைவுக்கு வருகிறது. இந்நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இந்திய அணி விளையாடிய வேளையில் மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Samson-and-Ruturaj

ஏனெனில் இந்திய அணி ஏற்கனவே இந்த தொடரை கைப்பற்றியுள்ளதால் மூன்றாவது போட்டியில் வாய்ப்புக்காக காத்திருக்கும் வீரர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. அந்த வகையில் ஏற்கனவே வெளியான தகவலின் படி பும்ராவிற்கு பதிலாக முகேஷ் குமாரும், பிரசித் கிருஷ்ணாவிற்கு பதிலாக ஆவேஷ் காணும், சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா விளையாடுவார்கள் என்று தெரிகிறது.

- Advertisement -

அதனை தவிர்த்து வேறு எந்த மாற்றமும் இருக்காது என்றும் நாளைய போட்டியில் ருதுராஜ் அணியை வழி நடத்துவார் என்றும் தெரிகிறது. அந்த வகையில் நாளைய 3-ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் உத்தேச பட்டியல் இதோ :

இதையும் படிங்க : அவரோட உழைப்ப ஐபிஎல் தொடரில் பாத்துருக்கேன், இனிமேல் உலகமே அவர பாராட்டும் – 24 வயது இந்திய வீரரை வாழ்த்திய மெக்கல்லம்

1) ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) திலக் வர்மா, 4) ஜிதேஷ் சர்மா, 5) ரிங்கு சிங், 6) ஷிவம் துபே, 7) வாஷிங்க்டன் சுந்தர், 8) ஆவேஷ் கான், 9) முகேஷ் குமார், 10) அர்ஷ்தீப் சிங், 11) ரவி பிஷ்னாய்.

Advertisement