ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகளும் தற்போது இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன. அந்த வகையில் குரூப் இரண்டில் இடம் பெற்றுள்ள இந்திய அணியானது இந்த சூப்பர் 12 போட்டிகளில் இரண்டு வெற்றி மற்றும் ஒரு தோல்வி என நான்கு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

இந்நிலையில் நாளை அக்டோபர் 2-ஆம் தேதி அடிலெய்டு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ள முக்கியமான போட்டியில் வங்கதேச அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு மேலும் அதிகரிக்கும் என்கிற காரணத்தினால் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிலையில் இந்திய அணி நாளை வங்கதேச அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
இந்நிலையில் இந்த வங்கதேச அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. அந்த வகையில் கடந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் சேர்க்கப்பட்ட தீபக் ஹூடா அணியிலிருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் அவருக்கு பதில் அக்சர் பட்டேல் அணியில் இணைவார் என்று தெரிகிறது.

அதேபோன்று கடந்த போட்டியில் காயம் அடைந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் தொடர்ந்து பேட்டிங்கிலும் சொதப்பி வருவதால் அவருக்கு பதிலாக இடது கை ஆட்டக்காரரான ரிஷப் பண்ட்டை மிடில் ஆர்டரில் சேர்க்கலாம் என்றும் தெரிகிறது.
அந்த வகையில் நாளைய போட்டிக்கான இந்திய அணியில் இந்த குறிப்பிட்ட இரண்டு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : இந்தியாவின் 4வது போட்டி நடைபெறும் அடிலெய்ட் மைதானம் எப்படி, புள்ளிவிவரங்கள் – பிட்ச், வெதர் ரிப்போர்ட் இதோ
1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) ரிஷப் பண்ட் / தினேஷ் கார்த்திக், 6) ஹார்டிக் பாண்டியா, 7) அக்சர் படேல், 8) ரவிச்சந்திரன் அஷ்வின், 9) புவனேஷ்வர் குமார், 10) முகமது ஷமி, 11) அர்ஷ்தீப் சிங்.



