வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

IND-vs-BAN
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 19-ஆம் தேதி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இந்திய அணியின் வீரர்கள் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் :

இந்நிலையில் நாளைய இந்த இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்த உத்தேச பட்டியலை இங்கு காணலாம்.

- Advertisement -

அந்த வகையில் வங்கதேச அணிக்கெதிரான முதல் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர்களா யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்குவது உறுதி. அவர்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் சுப்மன் கில்லும், நான்காவது இடத்தில் வழக்கம் போல விராட் கோலியும் களமிறங்குவார்கள்.

ஐந்தாவது இடத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள கே.எல் ராகுல் இடம் பிடிப்பார். அது தவிர்த்து ஆறாவது வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் விளையாடுவார். சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகம் என்பதனால் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகியோர் இடம் பிடிப்பார்கள்.

- Advertisement -

எஞ்சியுள்ள கடைசி இரண்டு இடங்களுக்கு வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் விளையாடுவார்கள் என்று தெரிகிறது. அதன்படி வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : இந்த ஸ்ட்ரென்த் போதும்.. இந்திய அணிக்கு எதிரா எங்க வித்தையை காட்டுவோம் – வங்கதேச கோச் பேட்டி

1) ரோஹித் சர்மா, 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) சுப்மன் கில், 4) விராட் கோலி, 5) கே.எல் ராகுல், 6) ரிஷப் பண்ட், 7) ரவீந்திர ஜடேஜா, 8) ரவிச்சந்திரன் அஷ்வின், 9) அக்சர் படேல், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) முகமது சிராஜ்.

Advertisement