இலங்கை அணிக்கெதிரான 3 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

IND-vs-SL
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இலங்கை நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ள வேளையில் அந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

அதனை தொடர்ந்து மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று ஜூலை 30-ஆம் தேதி பல்லக்கல்லே நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இலங்கை அணியை வாஷ் அவுட் செய்யும் முனைப்புடன் இந்திய அணி தயாராகி வருகிறது. அதேவேளையில் கடைசி போட்டியில் வெற்றி பெற்று தங்களது ஆறுதல் வெற்றிக்காக இலங்கை அணியும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இன்றைய மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? மாற்றங்கள் ஏதும் நிகழுமா? என்பது குறித்த தகவல்களை இங்கு காணலாம். அந்த வகையில் கடந்த இரண்டாவது போட்டியை கழுத்து வலி காரணமாக தவறவிட்ட சுப்மன் கில் மூன்றாவது போட்டியில் விளையாட இருப்பதினால் அவர் நேரடியாக அணிக்குள் வருவார்.

அதே போன்று கடந்த போட்டியில் துவக்க வீரராக வாய்ப்பை பெற்ற சஞ்சு சாம்சன் டக் அவுட்டானதால் இன்றைய போட்டியில் அவர் வெளியேற்றப்பட கூட வாய்ப்புள்ளது. மற்றபடி முதல் இரண்டு போட்டியிலும் இடம் பெற்ற அக்சர் பட்டேலுக்கு பதிலாக தமிழக ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் கடந்த இரண்டு போட்டிகளாக விளையாடிய அர்ஷ்தீப் சிங்குக்கு ஓய்வு வழங்கப்பட்டு அவருக்கு பதிலாக கலீல் அகமதுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனை தவிர்த்து இந்திய அணியில் வேறு ஏதும் பெரிய மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : தொடர்ந்து அசத்தி வரும் இந்திய வம்சாவளி அமெரிக்க வீரர்.. ஐ.பி.எல் தொடரில் விளையாடவும் வாய்ப்பு – யார் இந்த வீரர்?

1) சுப்மன் கில், 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) சூரியகுமார் யாதவ், 4) ரிஷப் பண்ட், 5) ஹார்டிக் பாண்டியா, 6) ரிங்கு சிங், 7) ரியான் பராக், 8) வாஷிங்டன் சுந்தர், 9) ரவி பிஷ்னாய், 10) முகமது சிராஜ், 11) கலீல் அகமது.

Advertisement