இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியினை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றன.
மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் ஏற்பட்டுள்ள மாற்றம் :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10-ம் தேதியான இன்று துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியானது முதலில் பந்துவீசி வருகிறது.
இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணி சார்பாக ஒரே ஒரு மாற்றம் இருப்பதாகவும் அந்த வகையில் ஜாஷ் டங் வெளியேற்றப்பட்டு ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடுவதாகவும் பென் ஸ்டோக்ஸ் அறிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லும் தங்களது அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வகையில் பிரசித் கிருஷ்ணா வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக இரண்டாவது போட்டியில் ஓய்வில் இருந்த பும்ரா மீண்டும் பிளேயிங் லெவனுக்குள் வருவதாகவும் அறிவித்தார்.
கடந்த போட்டியின் போது இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்து அணியை வீழ்த்திய வேளையில் அதே இந்திய அணியுடன் தற்போது பும்ராவும் இணைந்துள்ளதால் தற்போது இந்திய அணியின் பலமும் அதிகரித்துள்ளது.
மேலும் பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியை போன்று லார்ட்ஸ் மைதானத்தின் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று இந்த தொடரில் முன்னிலை பெரும் உத்வேகத்துடன் விளையாட இருப்பதால் இந்த போட்டியானது ரசிகர் மத்தயில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : அவரு மேட்ச்ல ஆடாம வெளியில் இருப்பதை என்னால பாக்க முடியல.. இந்திய வீரர் குறித்து – கெவின் பீட்டர்சன் பேட்டி
1) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 2) கே.எல் ராகுல், 3) கருண் நாயர், 4) சுப்மன் கில், 5) ரிஷப் பண்ட், 6) ரவீந்திர ஜடேஜா, 7) நிதீஷ் ரெட்டி, 8) வாஷிங்க்டன் சுந்தர், 9) ஆகாஷ் தீப், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) முகமது சிராஜ்.



