முதல் ஒருநாள் போட்டி : இலங்கை அணிக்கெதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவன் – உத்தேச பட்டியல் இதோ

ind
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் 18ஆம் தேதி துவங்க உள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய இலங்கை அணியில் ஒரு சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இந்த போட்டி அட்டவணையில் மாற்றம் இருந்தாலும் இந்த தொடரானது திட்டமிட்டபடி நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

indvssl

- Advertisement -

இதன் காரணமாக தற்போது இந்த தொடர் நடை பெறுவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முதன்மை வீரர்கள் அனைவரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை இருக்கையில் தற்போது இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியானது இந்த இலங்கை அணிக்கு எதிராக விளையாட தயாராகி உள்ளது.

அதன்படி தற்போது முதலில் துவங்க உள்ள இந்த ஒருநாள் தொடரில் இடம் பெறும் வீரர்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி முதல் ஒருநாள் போட்டியில் எந்தெந்த வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்ற பட்டியலை நாங்கள் உங்களுக்காக உத்தேச அணியை வழங்கியுள்ளோம். அதன்படி துவக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவான் மற்றும் இளம் வீரரான ப்ரித்வி ஷா களமிறங்குவது உறுதியாகி உள்ளது.

மேலும் மூன்றாவது இடத்தில் மணிஷ் பாண்டே அனுபவ வீரர் என்ற காரணத்தினால் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. அதேபோன்று நான்காவது இடத்தில் அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் இடம் பெறுவார். விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக யார் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் சாம்சனுக்கு ஐந்தாவது இடம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் ஆல்-ரவுண்டராக ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் பாண்டியா சகோதரர்கள் இடம்பெறுவார்கள்.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து பந்துவீச்சாளர்களாக புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர் மற்றும் சேத்தன் சக்காரியா ஆகியோருக்கும், சுழற்பந்துவீச்சாளர்களில் சாஹலுக்கு மட்டும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கிடைக்காது என்றும் கூறப்படுகிறது. இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

Chahal

1) ஷிகர் தவான், 2) ப்ரித்வி ஷா, 3) மனிஷ் பாண்டே, 4) சூரியகுமார் யாதவ், 5) சஞ்சு சாம்சன், 6) ஹார்டிக் பாண்டியா, 7) க்ருனால் பாண்டியா, 8) புவனேஷ்வர் குமார், 9) தீபக் சாஹர், 10) சேத்தன் சக்காரியா, 11) சாஹல்

Advertisement