இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச அணி இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் துவங்கியது. இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நாளை 12ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது.

Kohli

- Advertisement -

ஏற்கனவே முதல் போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மழை காரணமாக வெற்றி வாய்ப்பை தவற விட்டதால் நிச்சயம் இந்த இரண்டாவது போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் தங்கள் அணியில் சமநிலை இல்லை என்பதை உணர்ந்த இங்கிலாந்து அணி சில மாற்றங்கள் செய்து பலமாக திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நாளைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் ? என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் முதல் போட்டியின்போது அஷ்வின் நீக்கப்பட்டது மற்றும் இஷாந்த் சர்மாவிற்கு வாய்ப்பு கிடைக்காதது போன்றவற்றால் இந்திய அணியில் சற்று விமர்சனம் ஏற்பட்டது. இந்நிலையில் நாளைய போட்டிக்கான பிளேயிங் லெவனில் அணியில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது.

ஏனெனில் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற அனைத்து பவுலர்களுமே சிறப்பாக பந்து வீசினார்கள். அதுமட்டுமின்றி பேட்டிங்கும் ஓரளவு சிறப்பாகவே இருந்ததால் நிச்சயம் இரண்டாவது போட்டியில் இந்திய அணியில் மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவன் இதோ :

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) புஜாரா, 4) விராட் கோலி, 5) ரஹானே, 6) பண்ட், 7) ஜடேஜா, 8) பும்ரா, 9) ஷமி, 10) சிராஜ், 11) ஷர்துல் தாகூர்

Advertisement