இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாளை 26ஆம் தேதி புனே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாளைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்த அணியை இந்த பதிவில் காண்போம். அதன்படி ஏற்கனவே இந்திய அணியில் காயம் காரணமாக வெளியேறிய ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் காயத்தின் பாதிப்பில் இருக்கும் ரோகித் ஆகியோர் நாளைய போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக துவக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இறங்குவார்கள் என்று கூறப்படுகிறது. அடுத்தடுத்து 3வது மற்றும் 4வது இடத்தில் கோலி, ராகுல் ஆகியோர் களம் இறங்குவார்கள். ஸ்ரேயாஸ் அய்யர் இடத்தில் ராகுல் விளையாடுவதால் ஐந்தாவது இடத்தில் அறிமுக வீரராக சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்கு இந்திய அணியில் இடம்பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

அதன் பிறகு ஆல்-ரவுண்டராக ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தை பாண்டியா சகோதரர்கள் பிடிப்பார்கள். மேலும் பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை புவனேஷ்வர் குமார், பிரதீப் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர் மற்றும் குல்தீப் யாதவிற்கு சாஹல் ஆகியோர் களம் இறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.

இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான பிளேயிங் லெவன் அணி இதோ : 1) சுப்மன் கில், 2) ஷிகார் தவான், 3) விராட் கோலி, 4) கே.எல்.ராகுல், 5) சூர்யகுமார் யாதவ், 6) ஹார்டிக் பாண்டியா, 7) க்ருனால் பாண்டியா, 8) புவனேஷ்வர் குமார், 9) ஷர்துல் தாகூர், 10) சாஹல், 11) பிரசித் கிருஷ்ணா.



